அரசியல் பழிவாங்கல்கள் – ஆராய, ஜனாதிபதி ஆணைக்குழு!


ஜனவரி 8 ஆம் திகதி 2015 முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு, காவல்துறை விசேட விசாரணை பிரிவு என்பனவற்றில் இக்காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்கள் குறித்து ஆராய்வதற்வே இவ்வாணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தயா சந்தசிறி ஜயதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ ஆகியோரை உள்ளடக்கியே மேற்படி குழு உருவாக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.