புதிய கூட்டணியின் கீழ் தேர்தலில் போட்டியிட தீர்மானம்!

புதிய கூட்டணியின் கீழ் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.


இன்று கொழும்பில் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் கடந்த தேர்தலின்போது சிறிகொத்தா தலைமையகம் தமக்கு எதிராக செயற்பட்டது என்றும் குற்றம் சுமத்தினார்.

புதிய கூட்டணி எவ்வித அழுத்தத்துக்கும் உட்படாது செயற்படும். அத்துடன் எதிர்கால நலன் கருதி செயற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை நாளை நடைபெறும் சந்திப்பு ஒன்றில் ஐக்கிய தேசிய உட்பட்ட ஐக்கிய தேசிய முன்னணிக்கு தலைவராக சஜித் தெரிவு செய்யப்படுவார் என்றும் அந்த முன்னணியே பொதுத்தேர்தலில் போட்டியிடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Blogger இயக்குவது.