என்னது ரணில் தலைவரா?

சுமந்திரன் - ஜயா!  UNP க்குள்ள யார் தலைவர் என்று பெரிய பிரச்சனையாக இருக்காம். எங்களை உதவும்படி மங்களா கேட்கிறார்.


சம்பந்தர் - எங்கட பிரச்சனை அதைவிட மோசமாய் இருக்கு. நாங்க எப்படி அவைக்கு உதவ முடியும் தம்பி?

சுமந்திரன் - பேசாமல் ரணிலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக போட்டுவிடுவம். அவையின்ர பிரச்சனையும் தீர்ந்துவிடும். எங்கட பிரச்சனையும் தீர்ந்துவிடும் அல்லவா ஜயா?

சம்பந்தர் - என்னது தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு ரணில் தலைவரா? ஒரு சிங்களவரை தலைவராக எங்கட தமிழர் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் தம்பி.

சுமந்திரன் - ஏன் ஜயா? இத்தனை நாளும் ரணில் தலைமையில்தானே நாங்கள் இயங்கினோம். ரணிலுக்காகத்தானே இயங்கினோம். இதெல்லாம் தமிழ் மக்களுக்கு தெரியும்தானே?

சம்பந்தர் -- தேர்தல் வேற வரப் போகுது. இந்த நேரத்தில ஏன் தம்பி இந்த விஷப் பரீட்சை?

சுமந்திரன் - இல்லை ஜயா, அதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். நான் சொன்னால் உடனே என்னுடைய தம்பிகள் “சம்பந்தர் ஜயாவின் சாணக்கியம். - ஒரு சிங்களவரை வைத்தே சிங்களவரை எதிர்க்கும் சுமந்திரன் சாதுரியம்” என்றெல்லாம் பேஸ்புக்கில் எழுதுவாங்கள்.

சம்பந்தர் - அப்படி எல்லாம் எழுதுவாங்களா தம்பி? எனக்கே வெட்கமாய் இருக்கு. ஆனால் தம்பி “ நீர் என்ன வேண்டுமானாலும் செய்யும். எனக்கு என் சொகுசு பங்களா முக்கியம். தெரியும்தானே? அதை விட்டிட்டு என்னால இந்த வயசில் இருக்க முடியாதென்று?

சுமந்திரன் - என்ன ஜயா இப்படிச் சொல்லிட்டீங்க? ஒரு சின்ன வீட்டில் இருக்கிறியள். உட்காருவதற்கு ஒரு கதிரை கூட இல்லை. கட்டிலில்தான் உட்காருவோம் என்று பொய் சொல்லி இந்த சொகுசு பங்களாவை பெற்றுத் தந்ததே நான்தானே.. அதை மறப்பேனா?

குறிப்பு - யாவும் கற்பனை இல்லை.
Blogger இயக்குவது.