வவுனியா பிரபல பாடசாலையில் மாணவன் மீது ஆசிரியர் கடும் தாக்குதல்!


வவுனியா, பண்டாரிக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் 6ஆம் வகுப்பில் கணிதப்படம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை, பாடத்தில் கவனம் செலுத்தவில்லை என தெரிவித்து மாணவன் மீது கணிதப்பாட ஆசிரியர் தடியினால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதன்காரணமாக குறித்த மாணவனின் வலது கை மற்றும் உடம்பின் பிற்பகுதியில் பல தழும்புகள் ஏற்பட்டுள்ளன.

இதன்பின்னர் குறித்த மாணவன் பாடசாலை நிறைவுற்றதும் வீடு சென்று பெற்றோருக்கு இதனை தெரியப்படுத்தியுள்ளார்.


காயங்களை அவதானித்த பெற்றோர் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமணைக்கு தகவல் வழங்கியதுடன், வவுனியா பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை தாக்குதலுக்கு இலக்கான மாணவனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதுடன், மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்ட ஆசிரியரை விசாரணைக்காக அழைப்பானை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.