பயணிகள் விமானத்தை தாக்கியது ஈரான்தான்!

உக்ரைன் விமானம் ஈரானால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று ஆதாரங்கள் தெரிவிப்பதாகவும் இது தவறுதலாகக் கூட நடந்திருக்கலாம் என்றும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் கூறுகின்றனர்.


டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து பஹ்ரைன் நோக்கி போயிங் 737 -800 விமானம் கடந்த ஜனவரி 8ஆம் தேதி புறப்பட்டது. இந்த விமானம் உக்ரைன் அரசுக்கு சொந்தமான உக்ரைனியன் சர்வதேச ஏர்லைனர் விமானம் ஆகும். இந்த விமானத்தில் 176 பேர் பயணித்துள்ளார். 82 ஈரானியர்கள், 63 கனடியர்கள் மற்றும் 11 உக்ரேனியர்கள் மற்றும் சுவீடன், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணித்துள்ளனர். இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

அமெரிக்கா ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இரு நாடுகளில் ஏதேனும் ஓர் நாட்டின் தாக்குதலால் விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ஈரானின் சிவில் விமானத் தலைவர், விமானம் தங்கள் ஏவுகணையால் தாக்கப்படவில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.

அமெரிக்கா ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் மீண்டும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று முன்னெச்சரிக்கையுடன் இருந்த ஈரான், உக்ரைன் விமானத்தை அமெரிக்கா போர் விமானமாகக் கருதித் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் ஊகித்துள்ளன.

அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிபிஎஸ் நியூஸ், அமெரிக்க செயற்கைக்கோள் ஒன்றுக்கு ஏவுகணைகள் ஏவப்பட்டதற்கான இரு இன்ப்ராரெட் அறிகுறி கிடைத்ததாகவும், அதன்பின் வெடிப்புக்கான ஒரு அறிகுறி தெரிந்ததாகவும் தெரிவித்துள்ளது. அதுபோன்று அமெரிக்காவின் உளவுத் துறை தலைமையகமான பென்டகன், ரஷ்யாவின் தோர் ஏவுகணை மூலம் தாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

அதேசமயம் இந்த விமான விபத்தில் தனக்குச் சந்தேகம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உக்ரைன் அதிபர் மேற்கத்திய நாடுகளுக்கு இந்த விபத்து குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஈரான் செலுத்திய ஏவுகணை காரணமாகவே விமான விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று உக்ரைனும் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த விபத்தில் 63 கனடியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஈரானிய வான் பரப்பில் ஏவுகணை மூலம் தாக்கப்பட்டிருக்கலாம் என்று உளவுத் துறை மூலம் தெரியவந்ததாகக் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தவுள்ளோம், கனடாவிலிருந்து நிபுணர் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் கனடா மற்றும் எங்கள் சர்வதேச நட்பு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம், இப்போது ஒரு முழுமையான, வெளிப்படையான விசாரணை தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று நடந்த மாநாடு ஒன்றில் பேசிய ஈரான் சிவில் ஏவியேஷன் அமைப்பின் தலைவர் அலி அபெட்ஸாதே, இந்த விமானம் ஏவுகணையால் தாக்கப்படவில்லை. விமானம், கிளம்பிய சற்று நேரத்தில் மீண்டும் புறப்பட்ட விமான நிலையத்துக்கே திரும்ப முற்பட்டிருக்கிறது. விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த விமானத்தின் கருப்பு பெட்டியை அமெரிக்காவுக்கோ. போயிங் நிறுவனத்துக்கோ தர முடியாது என்று ஈரான் கூறியுள்ளது. வேண்டுமானால்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.