சீக்கிரமாக வெளிவரும் பட்டாஸ்:மாற்றப்பட்ட ரிலீஸ் தேதி!
தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் பட்டாஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம், பொங்கல் ரிலீசாக ஜனவரி 16-ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 16-ஆம் தேதிக்குப் பதிலாக ஜனவரி 15-ஆம் தேதியே பட்டாஸ் திரைப்படம் வெளிவரும் என்று படத்தின் புதிய போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தில் ஸ்னேகா மற்றும் மெஹ்ரீன் பிர்சடா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் நவீன் சந்திரா, நாசர், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த ஜனவரி 7-ஆம் தேதி பட்டாஸ் படத்தின் ட்ரெயிலர் வெளியானது.
தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான அடிமுறை மற்றும் கிக்-பாக்ஸிங்கை மையப்படுத்தி இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. சென்சாருக்காக விண்ணப்பிக்கப்பட்ட பட்டாஸ் திரைப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை