யாழ். நகரில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல் விழா!

யாழ் நகர் சத்திரத்து ஞானவைரவர் ஆலயத்துடன் இணைந்து பசு பாதுகாப்பு இணையத்தின் துணைத் தலைவர் ப.பாலசுப்பிரமணியம் தலைமையில் பசுக்களை பாதுகாக்கும் சகல சமய நிறுவனங்களின் இணையம் யாழ்.
பிரதேச கிராம அபிவிருத்திச் சமாசம் ஆகியன இணைந்து நடாத்திய பட்டிப் பொங்கல் விழாவும், கோபவனியும் நேற்று வியாழக்கிழமை சிறப்புற நடைபெற்றது. பிற்பகல்-02.15 மணியளவில் யாழ். நகரிலுள்ள சத்திரத்து ஞானவைரவர் ஆலய முன்றலில் மங்கள வாத்தியங்கள் முழங்க கோபவனி ஆரம்பமானது. மேற்படி கோபவனி மின்சாரநிலைய வீதி, பெரியகடை, யாழ். பேருந்து நிலைய மேற்கு வீதி, யாழ். ஆஸ்பத்திரி வீதியூடாக மீண்டும் சத்திரத்து ஞானவைரவர் ஆலயத்தை அண்மித்த பகுதியில் நிறைவடைந்தது.

குறித்த நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. யோகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ. ஐங்கரநேசன், தமிழ்மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் பொ. அருந்தவபாலன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோருடன் குருமார்கள், சமய- சமூகப் பெரியோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வின் இறுதியில் சத்திரத்து ஞானவைரவர் ஆலயத்தில் விசேட கோமாதா பூசையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் யாழ் நகர் வர்த்தகர் வேணி களஞ்சியத்திரால் விழாவில் கலந்து கொண்ட குருமார்கள், விருந்தினர்கள், சமய- சமூகப் பெரியோர்கள் ஆகியோர் வேணி களஞ்சியத்தினரால் கெளரவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.