சிறப்பாக நடைபெற்ற பிரித்தானிய பாரளுமன்ற(The Parliament of London) பொங்கல் விழா!
பிரித்தானிய தமிழர்கள் 15.01.2020 ( புதன்கிழமை)பிரித்தானிய பாராளுமன்றத்தில் தைப்பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடினார்கள். இந்தநிகழ்வில் ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.உலகத்தமிழ் வரலாற்றுச் மையம், தமிழ் ஆதரவு அமைப்பு, பிரிட்டிஷ் தமிழ் கன்சர்வேடிவ், மற்றும் தொழில்க்கட்ச்சிகான தமிழர்கள் ஆகிய அமைப்புகள் இணைந்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக பொங்கல் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிகழ்வில் பொங்கலின் பொருள் மற்றும் பாரம்பரியம் பற்றிய உரைகள், புல்லாங்குழல் இசை, பாரம்பரிய தமிழ் இசைக்கருவிகளின் பாராயணம், கும்மியாட்டம் மற்றும் காவடி நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெற்றன.
பிரதம மந்திரி போரிஸ் ஜான்சனின் பிரித்தானியாவிலும் மற்றும் உலகெங்கிலும் வாழும் தமிழ் சமூகத்திற்கு பிரத்தியேகமாக விடுத்த பொங்கல் செய்தியும் திரையிடப்பட்டது.
கொண்டாட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராபர்ட் ஹால்ஃபோன், கரேத் தாமஸ், தெரசா வில்லியர்ஸ், சர் டேவிட் அமெஸ், ஜாக்கி டாய்ல்-பிரைஸ், மரியா மில்லர், பாப் பிளாக்மேன், மத்தேயு ஆஃபோர்ட், லூக் பொல்லார்ட், எலியட் கோல்பர்ன், சாம் டாரி, சியோபன் மெக்டோனா மற்றும் பால் ஸ்கல்லி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து விருந்தினர்களுக்கும் சுவையான பொங்கல் மற்றும் பாரம்பரிய இனிப்புகளும் பரிமாறப்பட்டது.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ் கலாச்சாரம் மற்றும் பொங்கல் பண்டிகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்த நிகழ்வு வெற்றிகரமாக இருந்தது.
-க.பாலகிருஸ்ணன் -
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை