சித்தார்த்துக்காக சிம்பு பாடிய டக்கர் பாடல்!

சித்தார்த் கதாநாயகனாக நடித்து வெளியாகவுள்ள டக்கர் திரைப்படத்திற்காக சிம்பு பாடிய பாடல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சித்தார்த், ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் வெளியானது.
விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்ற அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி ஜி.கிருஷ் இயக்கும் டக்கர் படத்தில் சித்தார்த் நடித்துள்ளார்.பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இடம்பெறும் ‘ரெயின்போ திரளில்’ பாடலின் லிரிக் வீடியோ நேற்று(ஜனவரி 21) வெளியானது. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் பாடலை நடிகர் சிம்பு ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடியுள்ளார்.
துள்ளல் இசையுடன் அமைந்துள்ள இந்தப் பாடல் சித்தார்த் ரசிகர்களை மட்டுமின்றி சிம்பு ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இந்தப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், அபிமன்யூ சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.