2020-ஐ கலக்கப்போகும் வீடியோ கேம்கள்!

கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் ஷோ எனப்படும் சி.இ.ஸ் 2020-இல் பல்வேறு புதிய டெக்னாலஜி கொண்ட கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சோனி நிறுவனம், PS-5யின் லோகோவை வெளியிட்டது. ஆனால் இது எப்போது சந்தைக்கு வரும், இதனுடைய விலை மற்றும் வீடியோ தரம் போன்ற தகவல்களை வெளியிடவில்லை. தற்போது PS-5 எனப்படும் இந்த கேமிங் கன்சோலில் இடம்பெறப்போகும் வீடியோ கேம்களின் பட்டியல் வெளிவந்துள்ளது.


God Fall

பிளே ஸ்டேஷன் கேமிங் கன்சோலில் அனைவரின் வரவேற்பையும் பெற்று, மூன்று பாகங்கள் வரை வெளிவந்த 'God of War' எனப்படும் வீடியோ கேமை உருவாக்கிய குழு, தற்போது 'God Fall' எனப்படும் கேமை தயாரித்துள்ளது. பார்டர்லாண்ட்ஸ் எனப்படும் இந்த கிரியேட்டர்ஸ் இந்த கேமின் டிரெய்லரில் 'Holiday 2020' என்று ரிலீஸ் தேதியைக் குறிப்பிட்டுள்ளனர். எனவே இது வருகின்ற 2020ஆம் ஆண்டின் கோடை விடுமுறைக்கு மார்க்கெட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'God of War' தயாரித்த நிபுணர்கள் இதனை தயாரித்துள்ளதால், இந்த கேமில் கற்பனைக்கும் அப்பாற்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுவதுடன், இந்த கேமின் கதைக்களம் எவ்வாறு அமையும் என்ற விஷயமும் வீடியோ கேம் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Call of Duty: Black OPS 5

PS-4 மற்றும் PS-5 ஆகிய இரண்டு கேமிங் கன்சோலிலும் விளையாடக்கூடிய வகையில் கிராஸ் ஜெனெரேஷன் டைப்பில், 'Call of Duty: Black OPS 5' என்ற கேம் வெளிவரவுள்ளது. கோல்டு வார் என்ற கான்செப்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கேமின் மொபைல் வெர்ஷன் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி, PUBG போன்ற ஆன்லைன் கேம் விளையாடுவோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேமில் போர் காட்சிகள் இடம்பெறுவதால் இதனுடைய கிராஃபிக்ஸ் காட்சிகள் எவ்வாறு அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Ghost of Tsushima

நாட்டில் ஊடுருவிய எதிரிகளை எதிர்த்துப் போரிடும் சாமுராய் வீரனைப்பற்றிய கதைக்களம். PS-4 இல் 3D ஒலியில் தயாரித்து வெளிவந்த இந்த வீடியோ கேம், பழங்கால கத்திச்சண்டை பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

God of War 2

PS-5 யில் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் ரிபூட் செய்யபட்டு, கேம் பிரியர்களை 4K தரத்தில் மீண்டும் க்ரேடோஸ் சந்திக்கவுள்ளார். இதுவரை வெளிவந்த வீடியோ கேம்களில் மனதிற்கு மிகவும் பிடித்த கேம் என்று விரல்விட்டு எண்ணக்கூடிய பட்டியலில் இருக்கும் 'God of War 2' கேமுடைய PS-5 வெர்ஷன், வருகின்ற கோடைகாலம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Batman: Arkham Legacy

வார்னர் ப்ரோஸ் PS-5 பேட்மேன் வீடியோ கேமை 'Batman: Arkham Legacy' என்ற பெயரில் ரிலீஸ் செய்யும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ கேமில், பேட்மேன் குடும்பத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களையும் நம்மால் இயக்கக்கூடிய வகையில் இதில் பல்வேறு அம்சங்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. பேட்மேனை மட்டும் வைத்து விளையாடாமல் பல்வேறு கதாபாத்திரங்களுக்கு மாற்றிக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பது இந்த கேமின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Final Fantasy XIV

வினோதமான கதாபாத்திரங்கள் கொண்டு, பல்வேறு கேமர்ஸ் இணைந்து விளையாடக்கூடிய ஆன்லைன் வீடியோ கேமான 'Final Fantasy XIV' கலைவான விமர்சனங்களை பெற்றுள்ளது. PUBG, Freefire போன்ற வீடியோ கேம்களை விளையாடுவோர் மத்தியில் இந்த கேம் நல்ல விமர்சங்களை பெற்றுள்ளது என்பதால், PS-5 யில் இது இடம்பெறும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீடியோ கேம்ஸை பற்றிய புதிய அப்டேட்களை வெளியிடுவதற்கென்றே எலக்ட்ரானிக் என்டர்டெயின்மெண்ட் எக்ஸ்போ என்ற நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. 'E3 2020' என்ற இந்த நிகழ்ச்சி வருகின்ற ஜூன் 9 முதல் ஜூன் 11 வரை நடைபெறவுள்ளது.

PS-5 இல் இடம்பெறப் போகும் வீடியோ கேம்கள் 'Holiday 2020' என்று தேதி அறிவிக்கப்படாமல், விடுமுறை காலத்தில் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், PS-5 எப்போது வெளியாகும் என்ற தேதியும் இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.