வரன்டோப் நகரில் நடைபெற்ற தளபதி கேணல் கிட்டு நினைவு வணக்க நிகழ்வு!

தளபதி கேணல் கிட்டுவின் நினைவு வணக்க நிகழ்வு 25.01.2020 நேற்று warendorf நகரில் நடைபெற்றது . செல்வி தாட்சாயணி அவர்கள் நிகழ்வினை அழகு தமிழில் தொகுத்து வழங்கினார். பொதுச்சுடரினை, தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளர் திரு.ஆனந்தரராஜா, சசிகாந்தன் இராசலிங்கம் - தமிழ் கலாசார மன்றம்  ennigerloh,

செல்வராஜா செல்வமாணிக்கம் - அறிவிப்பாள சமூக ஆர்வலர் வாசன் சிவப்பிரகாசம்,
பிரசன்னா இலங்கநாதன் - யாழ். விளையாட்டுக் கழக உறுப்பினர் - warendorf ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
   கேணல் கிட்டு அவர்களின் திருவுருவப் படத்திற்கு திரு.சுமன் அவர்கள் மலர்மாலை அணிவிக்க,   மாவீரர் கப்ரன் சிவா அவர்களது சகோதரர் திரு.கேமச்சந்திரன்  முத்துலிங்கம் அவர்கள் ஈகைச்சுடரை ஏற்றிவைக்க  தொடர்ந்து ´´ பச்சை வயலே ´´ என்ற தமிழீழப் பாடலை செல்வி சந்தியா கேமச்சந்திரன் அவர்கள் பாடிச் சிறப்பித்தார். சமவேளையில் உறவுகள் அனைவரும் மலர், சுடர்  வணக்கம் செய்தனர் . ´´தமிழீழ விடுதலைப்போரின் புதிய வடிவம்´´ என்ற தலைப்பில் மனித உரிமைகள் அமைப்பு - பிரேமன் ஐச் சேர்ந்த விராஜ் மென்டிஸ் அவர்கள் உரையாற்றினார்.  ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதித்த தவறான தடையே, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான அடிப்படையாகும்,    திருகோணமலை என்ற துறைமுகத்தைத் தம்பால் ஈர்த்துக்கொள்வதற்காக அமெரிக்க அரசு 1983 தொடக்கம் முயன்றுவருவதாகவும், 2009 வரை அதற்குச் சம்மதிக்காத விடுதலைப்புலிகளை அழித்தே ஆகவேண்டும் என்ற முடிவிற்கு அமெரிக்கா முடிவெடுத்ததை விடுதலைப்புலிகளின் தலைமை ஏற்கனவே அறிந்துவிட்டிருந்ததாகவும் தெரிவித்த மென்டிஸ் அவர்கள், ஐரோப்பிய நீதிமன்று எடுத்த தவறான முடிவின் மீது வழக்குத் தொடுப்பதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பது பற்றியும் மக்களுக்கு விளக்கமளித்தார். தம்மாலான உதவியை திரு.மென்டிஸ் அவர்களுக்கு வழங்க மக்கள் உறுதியளித்தனர்.

அதனைத் தொடர்ந்து ´´சாட்சிகளின் கொலை´´ என்ற தலைப்பிலான காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆவணப்படம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

நிகழ்வின் சிறப்பம்சமாக ´´நந்திக்கடல் பேசுகிறது´´ ஆவண நூல் வெளியிட்டுவைக்கப்பட்டது.  தமிழீழ விடுதலைச் செயற்பாட்டாளரும் அறிவிப்பாளருமான திரு.வலன்ரைன் அவர்கள் ஆவணநூலின் அறிமுகத்தை நிகழ்த்தினார். அதன்பின்னர் உறவுகள் அனைவரும் நூலைப் பெற்றுக்கொண்டனர். இரவு 20.00 மணியளவில் நிகழ்வு நிறைவடைந்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.