இந்தியர்களை மீட்ட ஏர் இந்தியா பைலட்டின் அனுபவம்!!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவில் இருக்கும் இந்தியர்களை மீட்க வுகான் சென்ற விமானம் இன்று காலை வெற்றிகரமாக டெல்லி வந்தடைந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் மொத்த சீனாவும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. வைரஸ் பாதிப்பினால் இதுவரை அங்கு 250 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 11,000 பேருக்கும் அதிகமானவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இதுவரை 15-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் சீனாவின் வுகான் மாகாணத்தில் சிக்கியிருந்த 600 இந்தியர்களை மீட்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பல முயற்சிகளைச் செய்து வந்தனர். இதற்காக ஏர் இந்தியாவின் 747- 400 போயிங் ரக இரண்டு விமானங்கள் தயார் நிலையில் இருந்தன. சிறப்பு மருத்துவக் கருவிகளுடன் மருத்துவர்கள், பொறியாளர்கள் உட்பட 20 பேர் ஒரு விமானத்தில் பயணிக்கவிருந்தனர். சீனாவின் அனுமதி வந்தவுடன் நேற்று பிற்பகல் 12:30 மணிக்கு டெல்லியிலிருந்து சீனாவின் வுகான் நோக்கிப் புறப்பட்டது ஒரு ஏர் இந்தியா விமானம்.
அந்த விமானம் 324 பயணிகளுடன் வெற்றிகரமாக இன்று காலை இந்தியா வந்தடைந்தது. தங்களின் பயண அனுபவம் பற்றி ஏ.என்.ஐ ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டுள்ளார் அந்த விமானத்தின் பைலட் அமிதாப் சிங். ``என்னுடன் சேர்த்து மொத்தம் 20 பேர் இந்தியாவிலிருந்து வுகானுக்குச் சென்றோம். எங்களுடன் மிகச் சிறந்த மருத்துவர்கள் வந்திருந்தார்கள். நாங்கள் எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் நொடிக்கு நொடிக்கு அறிவுறுத்திக்கொண்டே இருந்தனர்.
மொத்தமாக 7 மணி நேரம் சீன மண்ணில் எங்கள் விமானம் இருந்தது. மாணவர்கள், மக்கள் அனைவரும் நேரடியாக விமானத்துக்கு அருகில் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் குடியுரிமைச் சோதனை செய்யப்பட்டது. சீன அதிகாரிகளும் எங்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கி கவனித்தனர். நாங்கள் அங்கு இந்த நேரம் முழுவதும் மிகவும் சவாலானதாக இருந்தது.
விமானப் போக்குவரத்து நெரிசல் பற்றி அதிகாரிகளிடம் எப்போதும் கேட்டறிந்துகொண்டே செல்வோம். ஆனால், நேற்று நாங்கள் பயணித்த டெல்லி முதல் வுகான் வரையிலான தூரத்தில் ஓரிரு விமானங்கள் மட்டுமே எங்களைக் கடந்தது. சீனாவுடன் இணையும் மொத்த விமான வழித்தடமும் காலியாகவே இருந்தது. வுகான் விமான நிலையமும் மக்கள் நடமாட்டம் இன்றிதான் காணப்பட்டது. அனைத்து இடங்களிலும் எங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக 1990-ம் ஆண்டு இராக்கில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது அங்கு சிக்கியிருந்த இந்திய மக்களை மீட்க முதல் ஆளாகக் களமிறங்கியதும் பைலட் அமிதாப் தான். இது மட்டுமல்லாமல் காஷ்மீர் பள்ளத் தாக்குதலில் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும் மக்களைப் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வந்தது பைலட் அமிதாப் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் சிக்கியிருக்கும் மீதமுள்ள இந்தியர்களை மீட்பதற்காகச் செல்லவுள்ள இரண்டாது விமானத்தின் பைலட்டும் இவர்தான்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo