ஹரியின் பிரிவு குறித்து அண்ணி கேத்மிடில்டன் பகிர்ந்தவை!!

இங்கிலாந்தின் இளைய இளவரசர் ஹாரியும் அவருடைய மனைவி மேகன் மார்க்கிலும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கடந்த வாரம் கனடா நாட்டுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். இந்நிலையில் ஹாரியின் அண்ணி கேட் மிடில்டன், ஹாரியின் பிரிவு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று அந்நாட்டுப் பத்திரிகையாளர்களோடு பகிர்ந்திருக்கிறார்.


ஹாரி-மேகன் இருவரும் அவர்களின் திருமணத்திலிருந்தே ஏராளமான அரசக் குடும்பக் கோட்பாடுகளை உடைத்தெறிந்தனர். அந்த வரிசையில் கடந்த மாதம் இளவரசர் ஹாரி, தன் மனைவி மேகன் மற்றும் மகன் ஆர்ச்சியோடு அரச பொறுப்புகளிலிருந்து விடுபட்டு கனடா நாட்டுக்குச் சென்று புதிய வாழ்க்கையைத் தொடங்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஏராளமான விமர்சனங்கள் குவிந்தன. ஊடக வெளிச்சத்திலிருந்து எப்போதும் விலகி இருப்பவர் ஹாரி. அதனால், ஹாரியின் இந்த முடிவு குறித்து ஊடகங்களுக்கு எந்தவித விளக்கமும் அவர் கொடுக்கவில்லை.


இந்நிலையில்தான், `டச்சஸ் ஆஃப் கேம்பிரிட்ஜ்' என்று மரியாதையோடு அழைக்கப்படும் கேட் மிடில்டன், இளவரசர் ஹாரியுடனான நெருங்கிய பிணைப்பை இழக்கப்போவதாகவும் மீண்டும் அவருடன் ஒருபோதும் நெருங்கிப் பழக முடியாது என்றும் அந்நாட்டுப் பத்திரிகையாளர்களிடம் கவலையோடு பகிர்ந்திருக்கிறார்.

ஹாரியின் இந்த முடிவுக்கு ராணி எலிசபெத் சம்மதம் தெரிவித்திருந்தாலும், கேட்டுக்கே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மூன்று மகன்களின் தாய் என்றாலும் தன்னுடைய முதல் மகன் ஹாரி என்பதைப் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார் கேட். இந்நிலையில் கேட்டின் இந்தப் பதிவு அந்நாட்டு மக்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.