காட்டு யானைகளால் விவசாயிகள் கடும் பாதிப்பு!!

வவுனியா, சின்னத்தம்பனை கிராமத்தில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அங்கு விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு‌ வருகின்றனர்.


இது தொடர்பாக குறித்த பிரதேச விவசாயிகள் கடும் கவலை தெரிவித்துள்ளனர், “இரவு நேரங்களில் எமது வயலுக்குள் வருகின்ற காட்டு யானைகள் மூன்று ஏக்கர் அறுவடை செய்யக்கூடிய நெல்லை முற்றுமுழுதாக அழித்து விடுகின்றன.

எமது பயிர்ச்செய்கை கடந்த காலங்களிலே ஏற்பட்ட கடும் வரட்சியினால் முற்றுமுழுதாக அழிவடைந்தது. பின்னர் கடும் மழை வெள்ளத்தினால் விவசாய நிலங்கள் முற்றாக அழிவடைந்து நாம் பெரிதும் பாதிக்கப்பட்டோம்.

இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு காட்டு யானைகளின் தாக்கத்தினால் சுமார் மூன்றரை இலட்சம் பெறுமதியான நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.

நாம் வங்கியில் கடன் எடுத்து விவசாயம் செய்தோம். மருந்து, உர மானியங்கள், உழவு இயந்திர செலவுகள் என எல்லாவற்றையும் கடனாகவே செய்தோம். அதனால் இந்த வெளாண்மையை அறுவடை செய்தே விவசாயத்திற்காகப் பெற்ற கடனை மீண்டும் கொடுக்க வேண்டியுள்ளது.

ஆனால் காட்டு யானைகளின் தாக்கத்தினால் எமது பயிர்கள் முற்றாக அழிவடைந்துவிட்டன. இதற்கு சில தினங்களுக்கு முன்னர் காட்டு யானைகள் பயன்தரும் தாவரங்களை அழித்துவிட்டன. அந்த அழிவிற்கே இதுவரை எமக்கு எவரும் ஒரு உதவித் திட்டங்களும் செய்யவில்லை.

இந்நிலையில் இனிவரும் காலங்களிலாவது எமது விவசாய நிலங்களையும், பயிர்களையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு, விவசாய காணிகளுக்கான யானை வேலியினை அமைத்தும், அழிவடைந்த பயிர்களுக்கான நட்ட ஈட்டினையும் அரசாங்க உயரதிகாரிகள் பெற்றுத் தரவேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.