யாழில் தொடரும் மணல் கொள்ளை!!

யாழ்ப்பாணம், அரியாலை, உதயபுரம் பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


தனியார் காணிகளுக்குள் அத்துமீறி நுழையும் மணல் கொள்ளையர்கள் வீட்டு உரிமையாளரை அச்சுறுத்தி இரவு நேரங்களில் உழவு இயந்திரங்கள் மூலம் வாகனங்கள் சகிதம் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாக காணி உரிமையாளர்கள் பொலிஸில் முறைப்பாடளித்தனர்.

இதனையடுத்து யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய விசேட பொலிஸ் குழுக்கள் அரியாலை, உதயபுரம், பூம்புகார் மற்றும் நாவலடிப் பகுதியில் 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளன.

குறித்த பகுதிக்குச் சென்ற யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அவர்கள் இன்று மணல் அகழ்வில் ஈடுபட்டிருக்கவில்லை. அவர்கள் பொலிஸார் வருவதை அறிந்து கொண்டே குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

உதயபுரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதனால் கடல் நீர் நிலத்தில் புகும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில் குறித்த பகுதியில் நன்னீர் உவர் நீராக மாறும் நிலை ஏற்படலாம் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.