கொரோனா வைரஸ் தாக்கிய மூன்றாவது நபர் அடையாளம் காணப்பட்டார்!!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான மூன்றாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான அந்த நபருக்கு வெளிநாட்டிலேயே நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும் நோயாளி சிறப்பு என்.எச்.எஸ் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும் இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி (Chris Whitty) கூறியுள்ளார்.

வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க வலுவான தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் குறித்த நோயாளி யார் யாருடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பதைக் கண்டறிய நாம் இப்போது விரைவாகச் செயல்படுகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய சீனாவின் வுஹானில் உருவாகிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் இரண்டு நபர்கள் ஜனவரி 31 அன்று அடையாளம் காணப்பட்டனர்.

அவர்கள் இருவரும் நோய்வாய்ப்பட்டபோது யோர்க்கில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். அவர்களில் ஒருவர் யோர்க் பல்கலைக்கழக மாணவர், மற்றவர் அவருடன் தொடர்புடையவர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 563 ஆக உயர்ந்தது. உயிரிழப்புக்கள் பெரும்பாலும் ஹூபே மாகாணத்திலேயே ஏற்பட்டுள்ளன. மேலும் 28,018 பேருக்கு நோய்த்தொற்றுகள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.