டயமண்ட் பிரின்செஸில் பயணித்த பிரித்தானியருக்கு கொரோனா வைரஸ்!!

தேனிலவுக்காக தனது மனைவியுடன் கப்பலில் பயணித்த பிரித்தானியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


ஜப்பான் கடற்கரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டயமண்ட் பிரின்செஸ் (Diamond Princess) கப்பலில் பயணித்த ஆலன் ஸ்டீல், கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்துத் தெரிவித்த ஆலன் ஸ்டீல், தனக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதாக தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நோயின் எந்த அறிகுறியும் தனக்குத் தெரியவில்லை என்று ஆலன் ஸ்டீல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தனது நிலைமையினை முடிந்தவரை எல்லோருக்கும் தெரியப்படுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

51 வயதான ஆலன் ஸ்டீலின் மனைவி வென்டி கூறுகையில், தனது கணவர் பெப்ரவரி 10 ஆம் திகதி ஒரு புதிய வேலையைத் தொடங்க இருந்தார் என்று தெரிவித்தார்.

மேலும், மருத்துவர்களிடம் என்னையும் பரிசோதிக்க வேண்டும் என்று நான் கோரியுள்ளேன் என்றும் அவர் கூறினார்.

58 வயதான ஆலன் ஸ்டீல் கடந்த மாதம் தனது மனைவி வென்டியை (Wendy) திருமணம் செய்தார். வூல்வர்ஹம்ரனைச் (Wolverhampton) சேர்ந்த தம்பதியினர் தமது தேனிலவுக்காக டயமண்ட் பிரின்செஸ் கப்பலில் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி news.sky.com
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.