“சியாரா புயல்” பிரித்தானியாவை கடுமையாகத் தாக்கும்!


குளிர்காலத்தின் மூன்றாவது புயலான சியாரா (Ciara) பிரித்தானியாவுக்கு பனிப்புயல் நிலைமைகளைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் கடுமையான புயலால் பிரித்தானியா பாதிக்கப்படவுள்ளது.

இந்த வார இறுதியில் 80 மைல் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் வானிலை அலுவலகம் உயிராபத்து எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

சியாரா புயல் நாடு முழுவதும் தாக்கும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் கூறுகின்றனர்.

நாளை சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை பிரித்தானியா முழுவதும் புயலின் தாக்கங்கள் இருக்கும்.

வார இறுதியில் தரைப்பகுதியில் 50-60 மைல் வேகம் வரை காற்று வீசும் எனவும் கடலோரப் பகுதிகளில் 80 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை அலுவலகம் கூறுகின்றது.

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளில் நான்கு அங்குலங்கள் வரை பனிப்பொழிவு நிலைமைகள் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் புயல் காற்றினால் வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படலாம் எனவும் போக்குவரத்து இடையூறு மற்றும் மின்வெட்டு என்பனவும் ஏற்படக்கூடும் என்பதுடன் உயிராபத்து எச்சரிக்கையும் வானிலை அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

கடலோரப் பகுதிகளில் அலைகளின் சீற்றம் கடுமையாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி news.sky.com
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.