பாதுகாப்பு அமைச்சின் கீழ் தொல்பொருள் ஆய்வுத் திணைக்களம்!!
தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவது அவசியமென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.
தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு இதுவே சிறந்த வழியெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலபிட்டிய பகுதயில் நடைப்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் தொல்லியல் பாதுகாப்பு செயற்பாடுகளை உயர் ஒழுக்க விதிமுறைகளின் கீழ் முன்னெடுக்க வேண்டியது அவசியமெனவும், அதனால் அவற்றின் மீது முழுமையாக அதிகாரத்தை செலுத்தி பாதுகாக்க வேண்டியது அவசியமெனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பதே கடினமாக உள்ளதென தெரிவித்துள்ள அவர், வடக்கு, கிழக்கிலேயே அதிகளவான தொல்லியல் சின்னங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கில், இனமத மோதல்கள் ஏற்படும் பட்சத்தில் தொல்லியல் சின்னங்கள் சிதைவடையலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவற்றை பாதுகாத்தால் மாத்திரமே எதிர்கால சந்ததிக்கு வரலாறு தொடர்பாக தெரிவை வழங்க முடியுமெனவும் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo