தாதிய உத்தியோகத்தர் தேவாமிர்த தேவிக்கு ஆதரவாகப் போராட்டம்!
விசேட தர தாதிய உத்தியோகத்தரான செல்வி ஆர்.தேவாமிர்த தேவிக்கு ஆதரவாக கல்முனை பெண்களின் உரிமை அமைப்பு இலங்கை மனித உரிமை கல்முனைப் பிராந்திய ஆணைக்குழுவிடம் மகஜர் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.
கல்முனையில் அமைந்துள்ள அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரினால் அண்மைக் காலங்களாக விசேட தர தாதிய உத்தியோகத்தராகப் பணியாற்றும் செல்வி ஆர்.தேவாமிர்ததேவி அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவித்து போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இந் நிலையில் போராட்டத்தின் பின்னர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்தில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது
குறித்த போராட்டத்தை கல்முனை சுற்றுவட்டத்திலிருந்து ஆரம்பித்த முஸ்லிம் தமிழ் உள்ளிட்ட உள்ளடக்கிய கல்முனை பெண்களின் உரிமை அமைப்பு , அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக பல்வேறு சுலோகங்களை எழுப்பியது.
அத்துடன் பேரணியாக கிட்டங்கி கல்முனை வீதியின் ஊடாக சென்று இறுதியாக கல்முனை மனித உரிமை பிராந்திய காரியாலயத்தை வந்தடைந்தது அங்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீபை சந்தித்து குறித்த கல்முனை பெண்களின் உரிமை அமைப்பு பிரதிநிதி கல்முனை பெண்களின் உரிமை செயற்பாட்டாளரும் கல்முனை மாநகர உறுப்பினருமான பஸீரா றியாஸ் தலைமையிலான குழு மகஜரை கையளித்துள்ளது.
அதோடு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட தர தாதிய உத்தியோகத்தருக்கு உரிய பாதுகாப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதேவேளை உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள விசேட தர தாதிய உத்தியோகத்தரை அச்சுறுத்தும் செயற்பாடு தொடரும் பட்சத்தில் பல்வேறு வடிவில் போராட்டம் இடம்பெறும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கல்முனை மாநகர உறுப்பினரான பஸீரா றியாஸ் தெரிவித்தார்.
மேலும் விசேட தர தாதிய உத்தியோகத்தர் செல்வி ஆர்.தேவாமிர்ததேவியும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டதுடன், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீபையும் அவர் சந்தித்து கலந்துரையாடி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது .
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo