முப்படையில் புதிய படைச் சிப்பாய்களை இணைத்த அரசாங்கம்!
கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சட்டத்திற்கு புறம்பாக கடமையில் இருந்து வெளியேறி, கடமைக்கு திரும்பாத நான்காயிரத்து 299 முப்படை சிப்பாய்கள் பொது மன்னிப்பு காலத்தில் மீண்டும் சேவையில் இணைந்துள்ளனர்.
முப்படையினர் சட்டரீதியாக தமது சேவையிலிருந்து விலகுவதற்கு அல்லது மீண்டும் சேவையில் இணைந்து கொள்வதற்கு கடந்த 5 ஆம் திகதி முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டதற்கு அமையவே குறித்த முப்படை சிப்பாய்களும் சேவையில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.