உறவு விரிசலில் கோத்தபய மைத்திரி !

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புறக்கணிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முயற்சித்ததாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஆனமடுவ பகுதியில் இடம் பெற்ற நிகழ்வில் பேசிய போது ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார்.


கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு வழிவகுத்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் பங்களிப்பை மதிப்பிட சில பிரிவுகள் முயற்சிப்பதாகவும் அவர் சாடினார்.

குறித்த ஒப்பந்தத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கூட்டணியின் தலைவராக இருக்க வேண்டும், ஆனால் இந்த பிரிவினர்கள் ஒப்பந்தம் குறித்து கேள்வியெழுப்புகின்றனர் என குறிப்பிட்டார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற ஜனாதிபதிக்கு சுதந்திரக் கட்சி குறைந்தபட்சம் 400,000 வாக்குகளை வழங்கவில்லையா? என்றும் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பினார்.

இந்த நிலைப்பாடானது மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக கூறப்பட்டாலும் மைத்திரி தனித்து ஆளுமையான முடிவு எடுக்கக் கூடியவர் அல்ல எனவும் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
Blogger இயக்குவது.