தகவல்களை மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர், வழங்குமாறு கோரிக்கை!!

எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமது அலுவலகத்தில் கிழமை நாட்களில் காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை இது தொடர்பான தகவல்களை அறிவிக்க முடியும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல் திரட்டைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கான அதிகாரம் தமது அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அவ்வாறான தகவல் திரட்டு தயாரிக்கப்படவில்லை எனவும் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட தகவல் திரட்டு முழுமையானது அல்லவென கூறிய சாலிய பீரிஸ், பூரணமான தகவல் திரட்டை தயாரிப்பதற்கு உதவுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் 0112 056 504 மற்றும் 0112 667 108 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தலைமை அலுவலகம், கிளை அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று தகவல்களை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.