கொரோனா- அவசர ஆய்வில் கிடைத்த அற்புத தகவல்!!
கொரோனாவின் கொடூரப் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாமல் தொடர்ந்து சின்னாபின்னமாகி வரும் சீனாவில், இதுவரை 1500இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா (COVID-19) வைரஸ் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்குக் குறைந்த அளவு பாதிப்புகளையே ஏற்படுத்தக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் மிக எளிதில் பரவக் கூடியதாகவுள்ளது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரால் மேலும் இருவருக்கு அதிவேகமாக கொரோனா பரவுகிறது. ஆனாலும் இதுவரை இந்த கொடிய வைரஸ்க்குக் குறைவான எண்ணிக்கையிலான குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கொரோனாவின் அறிகுறியான சுவாசப் பிரச்சனையானது (நிமோனியா) கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
COVID-19 பாதிப்பால் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்ட, 26 முதல் 40 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் சிலர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். சீனாவின் வூஹான் நகரில் இந்தப் புதிய ஆராய்ச்சி நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசோதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தங்களது கர்ப்பக் காலத்தின் ஒன்பதாவது மாதங்களில் இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் சிசேரியன் மூலம் வெற்றிகரமாகக் குழந்தை பிறந்தது.
இந்த ஆய்வில் மிகவும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு என்னவென்றால், COVID-19 வைரசால் கருவிலுள்ள குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பதேயாகும். இந்த ஆய்வின் முடிவில் புதிதாக குழந்தையைப் பெற்றடுத்த தாய் ஒருவருக்கு, குழந்தை பிறந்து 36 மணி நேரங்களுக்குப் பிறகு செய்யப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால், பிறந்த குழந்தைக்கு தாயிடமிருந்து கொரோனா தொற்றிவிடக் கூடாது என்பதற்காக, தாயையும் குழந்தையையும் மருத்துவர்கள் தனிமைப்படுத்தி வைத்தனர். நெருங்கிய தொடர்பு மூலம் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கவே வேறு வழியின்றி இவ்வாறு பிறந்த குழந்தைகளைத் தாயிடமிருந்து பிரித்துவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, மேற்கண்ட ஆய்வு 9 மாத கர்ப்பக் காலத்தில் உள்ள பெண்களிடமே செய்யப்பட்டது. ஆனால் 3 அல்லது 6 மாத கர்ப்பமாக உள்ள தாய்மார்களுக்கு கொரோனா தொற்று இருந்தால், அது அவர்களின் கருவில் உள்ள குழந்தைகளுக்குப் பரவுமா என்பது குறித்து தெளிவாகச் சொல்ல முடியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கேள்விக்கான விடை வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதைப் பொறுத்ததாகும். 3 அல்லது 6 மாத கர்ப்பிணிகளுக்கு கொரோனா வைரஸ் தும்மல் மூலமாகப் பரவினால், சிசேரியன் மற்றும் சுகப்பிரசவம் இரண்டிலுமே ஆபத்து ஒரே மாதிரியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக இந்த வைரஸ் இரத்தம் அல்லது எச்.ஐ.வி. போன்ற உடல் திரவங்கள் மூலம் பரவியிருந்தால், சிசேரியனில் கொரோனா பரவும் வீச்சு குறையும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, “ஆய்வாளர்கள் செய்துள்ள ஆராய்ச்சி முடிவுகள் நம்பிக்கைக்குரியவை தான். ஆனாலும் இந்த ஆய்வு சிறிய அளவிலானது. கருவில் உள்ள குழந்தையை கொரோனா தாக்குமா, தாக்காதா என்பதை மிக உறுதியாகச் சொல்ல இன்னும் அதிக ஆராய்ச்சி செய்வது அவசியம்” என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo