எழுத்தாளர் நிரூபாவின் ‘இடாவேணி’ நூல் யாழில் வெளியீடு!
கனடாவில் வசிக்கும் பெண்ணிய எழுத்தாளர் நிரூபாவின் ‘இடாவேணி’ நூல் அறிமுகமும் உரையாடலும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு, நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகக் குவிவுமாடக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நூல் பற்றிய அறிமுகத்தை சுரேகா பரம் என்பவர் நிகழ்த்தியதுடன் கருத்தியல் சார்ந்த பெண்ணிய அணுகுமுறையை மதுஷா மாதங்கியும் வாசிப்பு அனுபவத்தை பிறைநிலா கிருஷ் ஆகியோரும் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், புலம்பெயர் இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நூலாசிரியரின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, சுனைக்குது, அச்சாப்பிள்ளை ஆகிய இவரது முன்னைய படைப்புக்கள் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டதுடன் புதிய கோணங்களில் பெண் எழுத்துக்களும் வாசிப்புக்களும் பெருகவேண்டிய அவசியத்தைப் பறைசாற்றுவதாகவும் இந்நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo