சீனா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை - செவிலியரின் உருக்கமான பதிவு!!
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீன மக்கள் முடங்கியுள்ளனர். இதுவரை 1500-க்கும் அதிகமானவர்கள் உயிழந்துள்ளனர். 60 ஆயிரத்தும் அதிகமானவர்கள் இதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மருத்துவமனைகளில் இருந்து 6,000-த்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மக்கள்தொகை அதிகம் கொண்ட சீனாவில், மருத்துவர்கள் குறைவாக உள்ளனர் என்பதை சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. சீனாவில் 10,000 மக்களுக்கு 2 மருத்துவர்கள் என்ற ரீதியில்தான் உள்ளனர், என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. வைரஸ் தாக்கம் அதிகம் பாதிக்கப்பட்ட வுஹான் மாகாணத்தில், மருத்துவப் பணியாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ ஊழியர்கள் இரவு பகல் பார்க்காமல் தொடர்ந்து பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில், சீன அரசு வெளியிட்டுள்ள ஒரு தகவல் மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. சீனாவில் 1,700 மருத்துவப் பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீன ஊடகங்களில் கடந்த சில நாள்களாக வெளியான மருத்துவப் பணியாளர்களின் புகைப்படங்கள், கொரோனாவின் தாக்கத்துக்கு எதிரான அவர்களின் தியாகங்களை வெளிப்படுத்துவதாக இருந்தது. முகத்தில் மாஸ்க் அணிந்து நீண்டநேரம் பணியாற்றுவதால் ஏற்பட்ட வடுக்கள். அந்தக் காயங்களுக்கு பிளாஸ்திரி போட்டுக்கொண்டு சேவையாற்றும் செவிலியர்களின் புகைப்படங்கள், அவர்களின் தியாகத்தை உணர்த்துவதாக இருந்தது.
இந்நிலையில், மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வெளியான தகவல், சீன மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. மருத்துவ ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதுவே மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படக் காரணம் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
வுஹான் மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் மருத்துவமனையில், 150-க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்கு பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர், அவர் பணியாற்றிய அதே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அந்த செவிலியர் வெளியிட்டுள்ள பதிவில், ``நான் அனுமதிக்கப்பட்டிருக்கும் தளம் மருத்துவ ஊழியர்களால் நிரம்பி காணப்படுகிறது. என் உடலில் இருக்கும் கொரோனா வைரஸ், சக நண்பர்களைத் தாக்கிவிடுமோ எனப் பயமாக இருக்கிறது. எனவே, அவர்கள் என் அறைக்கு வரும்போது, நான் மூச்சுவிடுவதை நிறுத்திக்கொள்கிறேன்” என்று சோகமாகப் பதிவிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo