செல்லாக்காசு அரசியல்வாதிகளுக்கு 1000 ரூபா பற்றி பேச அருகதையில்லை கடுப்பான தொண்டமான்!!

(க.கிஷாந்தன்)

"பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவையே வாங்கிக்கொடுக்க முதுகெழும்பற்ற - செல்லாக்காசு அரசியல் வாதிகளுக்கு ஆயிரம் ரூபா தொடர்பில் கதைப்பதற்கு எவ்வித அருகதையும் கிடையாது.
வழங்கப்பட்ட உறுதிமொழியின் பிரகாரம் மார்ச் முதலாம் திகதி முதல் நிச்சயம் ஆயிரம் ரூபா கிடைக்கும்." -  என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இன்று டயகம நெட்போன் பிரதேச பாடசாலையின் கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Blogger இயக்குவது.