புதிதாக பதிவு செய்ய 60 அரசியல் கட்சிகள் விண்ணப்பம்!
புதிதாக பதிவு செய்வதற்கு 60 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விண்ணப்பம் செய்துள்ளன. இவை அங்கீகரிக்கப்பட்டால், இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 120 ஆக உயரும்.
புதிய அரசியல் கட்சிகளை பதிவுசெய்யும் அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்டிருந்தது. நாளை திங்கட்கிழமை வரை புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யலாம்.
இந்த அறிவிப்பு வெளியான பின்னர் சுமார் 60 வரையான கட்சிகள் தம்மை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளன.
அவை அங்கீகரிக்கப்பட்டால், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை சுமார் 120 ஐ விட அதிகரிக்கும்.
அதிகளவான கட்சிகள் பதியப்பட்டுள்ளதாகவும், கட்சியை விற்பனை செய்வதற்காகவே சிலர் கட்சிகளை பதிவு செய்வதாக கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, தற்போது பெருமளவு கட்சிகள் பதிவிற்காக விண்ணப்பித்துள்ளன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, சில கட்சிகள் தங்கள் கட்சி பெயர்களையும் சின்னங்களையும் பயன்படுத்த விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து 10 மில்லியன் ரூபாய் அளவில் கோரியதாகக் கூறப்படுகிறது.
பதிவு செய்ய முயற்சிக்கும் கட்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை. ஆனால் அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்படுவதற்கான தகுதி குறித்து முடிவு செய்ய நேர்காணல்களை நடத்துவதாக அவர் கூறினார்.
அந்த கட்சிகள் எத்தனை ஆண்டுகளாக செயற்படுகின்றன, அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அளவு கோளாக வைத்திருப்பதாகவும் கூறினார்.