உயிர்கொல்லி கொரோனா - இலங்கை மாணவனின் அரிய கண்டுபிடிப்பு!!

சீனாவில் ஆரம்பமாகி தற்பொழுது உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்றின் பின்னர் உலகளவில் முகக்கவசங்களிற்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.


அத்துடன் முகக்கவசங்களின் விலையும் எகிறத் தொடங்கியுள்ளது. அதிக விலையில் முகக்கவசங்களை விற்பவர்களை கைது செய்ய அரசாங்கம் விசேட நடவடிக்கை எடுக்கும் நிலைமைக்கும் சென்றது.

இந்த நிலையில், இலங்கையின் பல்கலைகழக மாணவன் தம்மிக பிரபாத் முகச்கவசங்களை தயாரித்துள்ளார். களனி பல்கலைகழகத்தின் அறிவியல் பீட இரண்டாம் ஆண்டு மாணவன் தம்மிக பிரபாத் இந்த முகக்கவசங்களை உருவாக்கியுள்ளார்.

இவர் கம்பஹாவின் வெலிவேரியவில் வசிப்பதுடன் , கம்பஹா தக்ஷிலா வித்யாலயாவின் பழைய மாணவன்.

தனது தயாரிப்பு குறித்து அவர் கூருகையில்,

“இது நான் நீண்ட காலத்திற்கு முன்பு உருவாக்கிய வடிவமைப்பு. சமீபத்திய நாட்களில், கொரோனா வைரஸ் சீனாவைச் சுற்றிலும் வேகமாகப் பரவுகிறது. இலங்கை மக்களும் இதனால் அவதிப்படுகிறார்கள்.

இதன்பின்னர், நான் உருவாக்கிய மருத்துவ முகக்கவசத்தை மேலும் மேம்படுத்தியுள்ளேன். இது இலங்கையின் முதலாவது மருத்துவ முகக்கவசமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இராவணன் காலத்திலிருந்து இருந்ததாக நம்பப்படும் ஹெலா மெடிசின் முறையின் மேம்பட்ட முறையை பயன்படுத்தி உருவாக்கியுள்ளோம். மூலிகைப் பொருட்களால் இந்த முகக்கவசம் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு அடுக்கு மூலிகைகள் மற்றும் தூசி வடிகட்டியின் ஒரு அடுக்கையும் சேர்த்துள்ளேன்.

சந்தையில் உள்ள பொதுவான மருத்துவ முகக்கவசங்கள் சுமார் 8 மணி நேரத்தின் பின்னர் சுத்தப்படுத்த வேண்டியவை. ஆனால், இதனை 72 மணி நேரத்திற்குப் பிறகு, வாய்வழி குழியைக் கழுவி சுத்தப்படுத்தலாம். மூலிகை அட்டையை மாற்றி விட்ட, மீண்டும் பயன்படுத்தலாம் என் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த மருந்து பாதுகாப்பு முகக்கவசத்தின் பயன்பாடு உடலுக்கு எந்த ஒவ்வாமையையும் ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த தயாரிப்புகளை மிகவும் நியாயமான விலையில் சந்தைக்கு வெளியிடுவதற்கும் அதன் மூலம் பல புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் எங்களுக்கு திறன் உள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து மேற்கத்திய மருத்துவம் அல்லது ஆயுர்வேத மருத்துவத்தை விட நம் நாட்டில் நிலவும் ஹெலா மருத்துவத்தின் ஆதிக்கத்தை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும் என்பதை நாங்கள் காண்கிறோம் என்குறிப்பிட்ட அவர், .இந்த முக கவசத்தை உருவாக்கா களனி பல்கலைக்கழக அறிவியல் பீடத்தின்ம் ஸ்ரீ கிம்ஹான மதுரபெரும, ரவீந்திர வன்னியராச்சி மற்றும் கவீஷா ரணசிங்க ஆகியோர் எனக்கு உதவினாயதாகவும் கூறியுள்ளார்.

Blogger இயக்குவது.