சிங்கப்பூரில் சர்வதேச விமான கண்காட்சி!!
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச விமான கண்காட்சியில் சிவில் மற்றும் ராணுவ விமானங்களில் புகுத்தியுள்ள புதிய தொழில்நுட்பங்களை பல்வேறு நாடுகள் காட்சிப்படுத்தின.
விமானம் தயாரித்தல், பராமரித்தல், விமான நிலைய சேவைகள், ராணுவம் உள்ளிட்ட துறைகளுக்கான உயர்தர தொழில்நுட்பங்கள் குறித்த ஆசியாவின் மிகப்பெரிய கண்காட்சி கடந்த ஒருவாரமாக நடைபெற்று வருகிறது.
இதில்,சிங்கப்பூர் காட்சிப்படுத்திய அடுத்த தலைமுறை மின்னணு இயங்குதள பாதுகாப்பு சாதனங்கள் அதிக கவனம் பெற்றன.
அதேபோல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தை வைத்திருக்கும் பெற்றோருக்கான சிறப்பு கழிவறை, 3டி பொருளாதார வகுப்புவிமான இருக்கைகள் பார்வையாளர்களை கவர்ந்தது.