வவுனியாவில் ரெலோவின் 50ஆவது ஆண்டு நிறைவு விழா!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 50ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்றன.


ரெலோ இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இந்நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், க.கோடீஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், சிவநாதன் கிசோர், வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜனா, செ.மயூரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், ஈரோஸ் உட்பட பெருமளவான மக்கள், கட்சிதொண்டர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக கட்சியின் கொடியினை தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டு தமிழ்மொழி வாழ்த்து இசைக்கப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.