இந்திய அரசிற்கு விக்னேஸ்வரன் பகிரங்க அழைப்பு!
இறுதி யுத்தம் தொடர்பில் இலங்கைக்கு இருக்கும் பொறுப்பு கூறல் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்தியா முன்னின்று செயற்பட வேண்டும். வெறுமனே இலங்கையுடன் பேரம் பேசுவதற்கான ஒரு கருவியாக பொறுப்புக்கூறல் விடயத்தை இந்தியா பயன்படுத்தக் கூடாது.
தமிழ் மக்களுக்கான நீதி, நிலையான தீர்வு என்பவற்றுக்கான ஒரு கருவியாகவே பொறுப்புக்கூறலை இந்தியா பயன்படுத்த வேண்டும்.
இதுவே இந்தியாவுக்கு பல வழிகளிலும் அனுகூலமாக அமையும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன்.
இன்று அவர் வெளியிட்ட கேள்வி பதிலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
இலங்கைத் தமிழர் பிரச்சனையிலே இந்திய அரசு தனது தார்மீகப் பொறுப்பில் இருந்து தப்பியோட முடியாது. தமிழ் நாடு அதன் அங்கத்துவப் பிரதேசம் என்ற படியால் மட்டுமல்ல எதிர்கால பாரதநாட்டுப் பாதுகாப்பையும் உத்தேசித்தே இக்கூற்று பொருத்தமாகின்றது.
1987ல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைக் காட்டி போராட்ட இயக்கங்களை ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு ஆயுதப் போராட்டத்தைக் கைவிடச் சொன்னது இந்தியாவே.
இந்தியாவின் நேர்மை மீது நம்பிக்கை இழந்த புலிகள் இந்தியாவுடன் நேரடியாக மோதிய காரணத்தினால் இந்தியா – இலங்கைத் தமிழ் மக்கள் உறவில் விரிசல் ஏற்பட்டது. இதற்கு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ஒரு சிலரால் தவறாக வழிநடத்தப்பட்டமை காரணம் என்று பலர் எழுதி இருக்கின்றார்கள்.
அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன, ராஜீவ் காந்தியை தனது சாணக்கியத்தினால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக திருப்புவதில் வெற்றி கண்டார் என்று சிலர் கூறுவதிலும் உண்மைகள் இல்லாமல் இல்லை. பின்னர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதும் விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மேலும் விரிசல் அடைந்ததுடன் இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடாக் கொள்கையை நீண்ட காலம் இந்தியா கடைப்பிடித்தது.
ஆனால், இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு, வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த போராளிகளும் கொல்லப்பட்டபோது இந்தியா அதனை வேடிக்கை பார்த்து நின்று ஒரு பெரும் வரலாற்றுத் தவறை இழைத்திருந்தது. யுத்தத்தை நிறுத்துவதற்கான பல வெளிநாட்டு ராஜதந்திர முயற்சிகள் நடைபெற்றபோதும் இந்தியா அவற்றுக்கு ஆதரவு அளிக்காமல் குந்தகமாக செயற்பட்டமை வெள்ளிடைமலையான ஒரு உண்மையே.
இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பில் அப்போதைய இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் தெளிவான புரிதல் இல்லாமல் இருந்தமையும், எமது நாட்டு அரசியல்வாதிகள் இந்திய உயர்ஸ்தானிகர்களை உச்சி குளிரச் செய்து எம் நாட்டுத் தமிழர்கள் பற்றிப் பிழையான கருத்துக்களை அவர்களுக்குப் புகட்டி வந்தமையும், இலங்கை அரசாங்கங்கள் சீனாவைப் பயன்படுத்தி பூச்சாண்டி காட்டி இந்திய அரசாங்கத்தை இலகுவாக ஏமாற்றி வந்தமையும் இந்த வரலாற்றுத் தவறுக்கான காரணங்கள் எனலாம்.
இதே ஏமாற்று வித்தையை தற்போதும் இலங்கை அரசாங்கம் பயன்படுத்த எத்தனித்து வருகின்றது. ஆனால், மோடி தலைமையிலான அரசாங்கமும் தற்போதுள்ள இந்திய கொள்கை வகுப்பாளர்களும் இவற்றை நன்கு புரிந்து வைத்துள்ளார்கள் என்றே நம்புகின்றேன்.
ஆனாலும், எமக்கு எதிராகத் தொடரும் இனஅழிப்பை நிறுத்தி எமது இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாப்பதற்குக் காத்திரமான எந்த நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்காமல் ஒரு சில கூற்றுக்களைக் கூறிவிட்டு கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றமை எமக்கு ஏமாற்றம் அளிக்கின்றது.
1987ன் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக வந்த 13வது திருத்தத்தின் மூலம் கிடைத்த குறைந்தபட்ச அதிகாரம் கொண்ட மாகாண சபை அமைப்பை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட வடக்கு – கிழக்கு இணைப்பு இன்று இல்லை.
அரசாங்க அதிபர், மாவட்ட செயலாளர், கிராம சேவகர் போன்றோர் இப்போது மாகாண அரசின் அதிகாரத்தின் கீழ் இல்லை. கல்வி சுகாதாரத் துறைகள் சம்பந்தமாக மாகாண சபைக்கு தரப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டுள்ளன.
13வது திருத்தத்தின் கீழ் தரப்பட்ட காணி, பொலிஸ் அதிகாரங்கள் அன்றிலிருந்து தரப்படவே இல்லை. அதே போல 16ம் திருத்தத்தின் மூலமாக கூறப்பட்ட மொழி உரிமைத் தத்துவத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழே ஆட்சி மொழி என்ற அரசியல் அமைப்பின் 22வது விதி கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
மத்தியில் இருந்து கடிதங்கள் பல தடவைகள் மாகாணத்திற்குத் தனிச்சிங்களத்திலேயே இன்றும் அனுப்பப்படுகின்றன. 99 வீதம் தமிழர் வாழும் பிரதேசங்களில் கூட தமிழைப் பெயர்ப்பலகைகளில் முதலாவதாக எழுதக்கூடமுடியாதுள்ளது.
ஐ. நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு கூட்டாக கொண்டு வந்த 30:1 தீர்மானத்தினை இன்னமும் நிறைவேற்றாத நிலையில், அதில் இருந்து இலங்கை வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அது எடுத்துவரும் நிலையில், இந்தியாவின் ஆதரவினைத் தமக்கு அது சம்பந்தமாக பெற்றுக்கொள்ளும் ஒரு முயற்சியாக பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் அண்மைய விஜயம் அமைந்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் எம்மக்கள் மத்தியில் இருக்கின்றன.
ஆனால், மனித உரிமைகள் சபையின் ஏனைய உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து மனித உரிமைகள் சபையின் ஊடாக இறுதி யுத்தம் தொடர்பில் இலங்கைக்கு இருக்கும் பொறுப்பு கூறல் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்தியா முன்னின்று செயற்பட வேண்டும்.
வெறுமனே இலங்கையுடன் பேரம் பேசுவதற்கான ஒரு கருவியாக பொறுப்புக்கூறல் விடயத்தை இந்தியா பயன்படுத்தக் கூடாது. தமிழ் மக்களுக்கான நீதி, நிலையான தீர்வு என்பவற்றுக்கான ஒரு கருவியாகவே பொறுப்புக்கூறலை இந்தியா பயன்படுத்த வேண்டும். இதுவே இந்தியாவுக்கு பல வழிகளிலும் அனுகூலமாக அமையும்.
இந்தியா எது செய்தாலும் இலங்கை அரசாங்கங்கள் இந்தியாவிற்கு விஸ்வாசமாக இருக்கப் போவதில்லை என்பதை இந்தியா உணர வேண்டும்.
எவ்வளவு தான் இராணுவ பொருளாதார உதவிகளை வழங்கினாலும் இலங்கையின் சிங்கள அரசாங்கங்கள் இந்தியாவைத் தமிழர் சார்பான நாடாகவே பார்ப்பன. ஆகவே தமிழர் சார்பாக இந்தியா நடவடிக்கைகள் எடுப்பதை எவரும் பிழை கூறமாட்டார்கள். எவரும் பிழை கூறமுடியாது. இந்தியா துணிந்து நீதியை நிலைநாட்டலாம். நிலையான தீர்வைக் கொண்டு வரலாம்.
அண்மையில் ஒரு அரசதலைவர் வருகின்றபோது கடைபிடிக்க வேண்டிய சில இராஜதந்திர சம்பிரதாய வரைமுறைகளையே இந்தியா மகிந்த ராஜபக்ஷவுக்கு அளித்துள்ளது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எனக்கு இந்தியா மீது மிகுந்த நம்பிக்கை உண்டு.
தற்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்ஷங்கர் இலங்கை விடயத்தில் நீண்ட அனுபவமுடையவராகவும் சர்வதேச அரசியலில் மிகச்சிறந்த ராஜதந்திரியாகவும் இருக்கிறார். அவரது திறமை, சாணக்கியம், ராஜதந்திரம் ஆகியவற்றை தற்போதைய ஆட்சியாளர்கள் நன்கு உணர்வர். ஆகவே, இந்திய வெளியுறவு அமைச்சர் எமது பிரச்சனையைத் திறம்பட கையாள்வார் என்று நாம் நம்புகின்றோம்.
இந்தியாவின் பாதுகாப்பானது தென்கோடியில் இருக்கும் தமிழ் மக்களின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது என்பதை கடந்தகால பட்டறிவிலிருந்து இந்தியா உணர்ந்திருக்கும் என்று நம்புகின்றேன்.
அதற்கேற்ப திரைமறைவில் நகர்வுகளை மேற்கொள்வர் என்பது எனது எண்ணப்பாடாகும்.
ஆனால் அதற்காக நாம் விரும்பும் எல்லாம் எமக்குக் கிடைக்கும் என்பதல்ல இதன் அர்த்தம். “தட்டுங்கள் திறக்கப்படும்” என்பதற்கேற்ப நாம் திரும்பத்திரும்ப எமது நிலைப்பாடுகளை அவர்களிடத்தில் வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும். எமது நிலைப்பாடுகளில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். என்றோ ஒருநாள் எமக்கான கதவு திறக்கப்படும்.
ஆனால், தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எமது தமிழ்த் தலைமைகளோ இந்தியாவிடம் கேள்வி கேட்டு இந்தியாவின் தார்மீகப் பொறுப்பை வலியுறுத்தாமலும் தாம் பெற்றுக்கொண்ட சலுகைகள், சுக போகங்களுக்காக இலங்கை அரசாங்கத்துக்கு எதிர்ப்புகள் காட்டாமலும் ‘விலாங்கு மீன் பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டுவது போல’ செயற்பட்டு வந்துள்ளார்கள். சலுகைகளுக்காக தமது மௌனத்தை இதுகாறும் இவர்கள் விலை பேசி விற்றுவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo