மாணவர்கள் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி - பதுளையில் சம்பவம்!!
பதுளையில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் உடம்பெங்கும் அரிப்பு ஏற்பட்டு நோய்வாய்ப்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உப்படுத்தப்பட்டுள்ளனர்.
பதுளை கந்தகெட்டிய பகுதியின் உல்பத்த கனிஸ்ட வித்தியாலயத்தின் நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த வகுப்பறையொன்று இன்று (திங்கட்கிழமை) சுத்தம் செய்யப்பட்டு வகுப்பு ஆரம்பமாகியது.
அதைத் தொடர்ந்து அவ்வகுப்பு மாணவர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டனர். இதனையடுத்து குறித்த மாணவர்கள் கந்தகெட்டிய அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைகளுக்கு உப்படுத்தப்பட்டனர்.
குறித்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவிகளும் 12 மாணவர்களுமாக 15 பேரே இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
அந்த மாணவர்களுக்குத் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றதென்றும் இன்னும் நோய் கண்டறியப்படவில்லை என்பதுடன், உண்ட உணவு ஒவ்வாமையாக இருக்கலாம் என வைத்தியசாலையின் தலைமை வைத்தியர் காமினி மத்துமகே தெரிவித்துள்ளார்.
எனினும் மாணவர்களின் நிலை ஆபத்தானதாக இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo