நிர்பயா வழக்கில் 3 ஆவது முறையாக மரண தண்டனை விதிப்பு!

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று மூன்றாவது முறையாக டெல்லி நீதிமன்றம் மரண தண்டனைக்கான ஆணையை பிறப்பித்துள்ளது.


இதன்படி குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 3 ஆம் திகதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கெனவே கடந்த ஜனவரி 22 ஆம் திகதி முதல் மரண தண்டனையும், அதன்பின் பெப்ரவரி 1ஆம் திகதி 2 ஆவது மரண தண்டனைக்கானக்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், குற்றவாளிகள் தங்களுக்கு இருக்கும் சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி தண்டனையைத் தள்ளிப்போட்டனர். இறுதியாக ஜனவரி 31 ஆம் திகதி, விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறுத்தி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்‌சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது

ஜனவரி 22 ஆம் திகதி, பிப்ரவரி 1 ஆம் திகதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்து.

ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனையை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.