கப்பலில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்டது அமெரிக்கா!
ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் சிக்கியுள்ள தங்கள் நாட்டுக்கு மக்களை மீட்டு, சொந்த நாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளது அமெரிக்கா.
இதற்கமைய குறிப்பிட்ட சுமார் 300 அமெரிக்கர்களை, சொந்த நாட்டுக்கு அமெரிக்கா அழைத்துச் சென்றுள்ளது.
கப்பலில் இருக்கும் அமெரிக்கர்கள் சுமார் 400 பேரை மீட்க அமெரிக்கா 2 விமானங்களை ஜப்பானுக்கு அனுப்பி வைத்தது. எனினும் கப்பலில் இருக்கும் அமெரிக்கர்கள் சிலர், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காலம் முழுமையாக முடிவடைந்த பின்னரே கப்பலில் இருந்து இறங்குவோம் என கூறி விட்டனர்.
அதேபோல், கொரோனா பாதிப்பு இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட அமெரிக்கர்கள் 40 பேர், ஜப்பானிலேயே சிகிச்சை பெற்று, குணமடைந்த பிறகே நாடு திரும்ப முடியும் என அமெரிக்கா கூறிவிட்டது.
இதனால் குறிப்பிட்ட சுமார் 300 அமெரிக்கர்கள் கப்பலில் இருந்து விடுவிக்க ஜப்பான் அனுமதி அளித்தது. இதன்கமைய குறித்த 300 அமெரிக்கர்கள் கப்பலில் இருந்து இறக்கப்பட்டு, பேருந்துகள் மூலம் தலைநகர் டோக்கியோவில் உள்ள விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை ஏற்றிக்கொண்டு 2 விமானங்களும் ஜப்பானில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டது.
இந்த இடைப்பட்ட பயணத்தின்போது ஒரு விமானத்தில் இருந்த 14 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இது சக பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து விமான ஊழியர்கள் அந்த 14 பேரையும் மற்ற பயணிகளிடம் இருந்து தனிமைப்படுத்தி, விமானத்தின் பின்பகுதியில் அமரவைத்தனர்.
இந்த நிலையில் ஜப்பானில் இருந்து புறப்பட்ட 2 விமானங்களில் ஒன்று கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. மற்றொரு விமானம் டெக்சாசில் உள்ள விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.
இதையடுத்து கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 14 பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதே சமயம் நோய் பாதிக்காத நபர்களையும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பாமல் விமானப்படை தளங்களில் உள்ள ராணுவ மையங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்கள் அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருப்பார்கள் என்றும், அதன் பிறகு அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, 10 நாட்களுக்கும் மேலாக ஜப்பான் நாட்டில் உள்ள யோகோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தி, நிறுத்திவைக்கப்பட்டுள்ள ‘டைமண்ட் பிரின்சஸ்’ கப்பலில், 50இற்க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 3,711 பேர் சிக்கி தவிக்கின்றனர்.
இந்த கப்பல் தனிமைப்படுத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ள காலகட்டம் நாளையுடன் (புதன்கிழமை) முடிகிறது. நேற்று முன்தின நிலவரப்படி குறித்த கப்பலில், 355 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo