மேற்குவங்கத்தை நெகிழவைத்த லவ் ஸ்டோரி!!
கனவுகளைவிட மிக அழகான நிஜங்கள் மனித வாழ்க்கையில் நடப்பதுண்டு. அப்படியோர் அழகான, அன்பான நிஜமாகத்தான் சுலேகாவின் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) வாழ்க்கையில் திருமணம் நடந்திருக்கிறது.
யார் இந்த சுலேகா? மேற்கு வங்கத்தில் இருக்கின்ற ஹல்டியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அப்பா, பொரி வியாபாரி. இதன் மூலம் கிடைக்கிற சொற்ப வருமானம்தான் அந்தக் குடும்பத்தினரின் பசியைப் போக்கி வந்திருக்கிறது. இந்த ஆதாரமும் சுலேகாவின் 15-வது வயதில் பறிபோயிருக்கிறது. குடும்பத்தைக் காப்பாற்றி வந்த சுலேகாவின் அப்பா எதிர்பாராதவிதமாக இறந்துவிட, சுலேகாவின் பாட்டி அவளை பலவந்தமாக வீட்டைவிட்டு விரட்டி விடுகிறார். சுலேகாவின் அம்மாவோ இதையெல்லாம் தடுக்கவியலாத நிலையில் இருந்திருக்கிறார்.
``என் பாட்டி விரட்டியடித்ததும் நான் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் தஞ்சமடைந்தேன். அங்கே வருவோர், போவோரிடமெல்லாம் `யாராவது எனக்கு வேலை கொடுங்களேன்' என்று கெஞ்சிக் கொண்டிருந்தேன். அப்போது இரண்டு ஆண்கள் என்னிடம் வந்து, `ஒரு இடத்தில் வீட்டு வேலை காலியாக இருக்கிறது. நீ அந்த வேலையைச் செய்தால், உனக்கு சாப்பாடு போட்டு சம்பளமும் தருவார்கள்' என்றனர். நானும் நம்பி விட்டேன்.
அந்த நம்பிக்கையில் அவர்கள் கொடுத்த உணவையும் சாப்பிட்டுவிட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது. மறுநாள்தான் கண் விழித்தேன். நான் இருந்த இடம் பெண்களை வைத்து செக்ஸ் வியாபாரம் செய்கிற இடம். நான் இதைச் செய்ய மாட்டேன் என்று மறுக்க, அதை நடத்தி வந்தவர், என்னைக் கொடூரமாக அடிக்க ஆரம்பித்தார். என்னை பலவந்தமாக செக்ஸ் தொழிலில் ஈடுபடுத்தினார். அங்கிருந்து பலதடவை தப்பிக்க முயன்றேன். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர்களிடம் சிக்கிக்கொண்டு மறுபடியும் அதே கொடுமை... அதே நரகம்...'' என்று தேம்புகிறார் சுலேகா.
கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் பிறகு, ஓர் என்.ஜி.ஓ.வால் மீட்கப்படுகிறார் சுலேகா. பிறகு, பெண்கள் மறுவாழ்வு இல்லத்தில் பாதுகாக்கப்படுகிறார். அங்கிருக்கும் பெண்களுக்குப் புகழ்பெற்ற பேக்கரி நிறுவனமொன்று `பேக்கரி ட்ரெயினிங்' கொடுக்க, கற்றுத்தேர்ந்த சுலேகா, சின்னதாக பேக்கரி பிசினஸ் ஆரம்பித்திருக்கிறார்.
``நான் பேக்கரி பிசினஸ் செய்துகொண்டிருக்கையில்தான் அவரைச் சந்தித்தேன். அவர் பெயர் சுஜோய் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). அவர் கைப்பை தைக்கிற பிசினஸ் செய்துகொண்டிருந்தார். அவர் என்னை விரும்புவதாகச் சொன்னார். நான் என்னுடைய கடந்தகாலத்தை ஒளிவு மறைவில்லாமல் சுஜோயிடம் அப்படியே சொன்னேன். அவர், அதன் பிறகும் என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்'' என்று உணர்ச்சிவசப்படுகிற சுலேகாவுக்கும் சுஜோய்க்கும் சில தினங்களுக்கு முன்னால் திருமணம் நடந்தது. ''என் மனைவிக்காக கேக் தயாரிக்கும் சிறிய கடையொன்றை ஆரம்பிக்கப் போகிறேன். அதுதான் அவளுடைய கனவு'' என்கிறார் சுஜோய்.
அன்பின் கனவுகள் நிச்சயம் நிறைவேறும்!
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo