விக்னேஸ்வரனை எச்சரிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!!
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறும் உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பான கருத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தமது போராட்டத்தை ஆதாரம் இல்லாது கொச்சைப்படுத்தினால் அவருக்கு எதிராகவும் போராடுவோம் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பின் யாழ். இணைப்பாளர் சுகந்தி ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பிரித்தாழ்வதாக சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் கூறியதனூடாக எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பு மீது கட்சி சாயம் பூசி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் காாணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்குள் (OMP) முடக்க எத்தணிக்கிறாரா?
தமிழர்களை, காணாமலாக்கிய ஒட்டுக் குழுக்களை ஒன்றாக்கி ஒட்டுக் குழுக்களின் கூட்டணி அமைத்திருக்கும் விக்னேஸ்வரனுக்கு எம்மையும் எமது போராட்டத்தையும் எப்படிப் புரிந்து கொள்ளமுடியும்.
சி.வி.விக்னேஸ்வரன் நீதியரசர் என்ற பெயரை வைத்துக்கொண்டு நீதிக்கும் நேர்மைக்கும் உண்மைக்கும் எதிரான கருத்தை வெளிக்கொண்டு வருவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
எமது போராட்டத்தை கஜேந்திரகுமார் பிரித்தாழ்கின்றார் என்றால் அதற்கான ஆதாரங்களை விக்னேஸ்வரன் வெளிப்படுத்த வேண்டும். எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தி நீதி வேண்டிப் போராடி வருகின்றது. அத்துடன் ஓ.எம்.பி.யை வெளியேறக்கோரி தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம்.
எமது அமைப்பு கடந்த பெப்ரவரி 4ஆம் திகதியன்று இலங்கை சுதந்திர தினத்திற்கு எதிராக கருப்புக் கொடிகளைத் தாங்கி போராடி எமது எதிர்ப்பை வெளியிட்டோம். இவ்வாறு தூய்மையான போராட்ட அமைப்பின் மீது அரசியல் சாயத்தைப் பூசி அதை இல்லாமல் ஒழிக்க விக்னேஸ்வரன் முயற்சிக்கிறாரா?
இதேவேளை, இனிவரும் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடுதலை வேண்டி, உறவுகளின் வலி சுமந்த போராட்டத்தில் கலந்துகொள்ள முடிந்தால் வரலாம். இல்லையேல் எமது போராட்டம் பற்றி வாய் திறக்கக்கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo