ஆதி என்னுடைய சக்காளத்தி - புகழாரம் சூட்டுகிறார் குஷ்பு!
ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் வெளியான நான் சிரித்தால் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் வெற்றிச் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு, இயக்குனர் ராணா, நடிகர்கள் ஆதி, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ.ரவிகுமார், ரவிமரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது குஷ்பு பேசுகையில், ’நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் தோன்றும் சினிமா மேடை இது தான். நானும் எனது கணவரும் இளம் வயதில் இருந்தே சினிமாவில் தான் இருக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்தால் சரியான நேரத்தில் சம்பளம் போய்விடும். எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது.
இது தான் நான் தயாரிப்பு நிறுவனம் தொடங்க காரணம் என கூறியுள்ளார்.
நாங்கள் சினிமாவை நேசிக்கிறோம். எல்லா படங்களுமே ஓடவேண்டும். லாபம் பார்க்கவேண்டும் என்றுதான் விரும்புகிறோம். என்னுடைய கடைசி மகள் தான் முதலில் ஆதிக்கு ரசிகை ஆனார். பின்னர் நானும் ரசிகை ஆகி விட்டேன் . ஒரே ஒரு பாடலுக்கு இசையமைக்க வந்தவர் இப்போது குடும்பத்தில் ஒருவராகி விட்டார். தூக்கத்தில் எழுந்து பார்த்தால் கூட சுந்தர்.சி ஆதியுடன் பேசிக்கொண்டு இருப்பார். ஆதி ஒருவகையில் என்னுடைய சக்காளத்தி என்றே சொல்லலாம்’ என்று நகைச்சுவையாக பேசியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo