சிறிலங்காவின் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளாமலா? விக்னேஸ்வரன் சிறிலங்காவின் நீதித்துறையில் பணியாற்றினார்?

1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது தமிழ்க் கொங்கிரஸ் கட்சியும், தமிழரசுக்கட்சியும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டது.

1977ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டது. அத்தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு நான்குபேர் தமிழ்கொங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். (மு. சிவசிதம்பரம் நல்லூர் தொகுதியிலும், ஆனந்தசங்கரி கிளிநொச்சி தொகுதியிலும், திருநாவுக்கரசு வட்டுக்கோட்டை தொகுதியிலும் தா. சிவசிதம்பரம் வவுனியா தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் இத்தேர்தலில் போட்டியிடும்போது கொங்கிரஸ்கட்சி உறுப்பினர்கள்.)
கேள்வி என்னவென்றால் ஒற்றையாட்சிதான் கொங்கிரசின் கொள்கையாக இருந்திருந்தால் இது எப்படி நடந்தது என்பதனை விக்னேஸ்வரன் விளக்குவாரா?
1982ம் ஆண்டு நடந்த சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலம் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்துப் போட்டியிட்டார்.
இவையெல்லாவற்றையும் விட்டாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழ் கொங்கிரஸ் உள்வாங்கப்பட்டபோது கொங்கிரசின் கொள்கை ஒற்றையாட்சி என்றிருந்தால் அக்கட்சி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குமா?
விக்னேஸ்வரனுக்கு அரசியல் நடைமுறை விளங்காவிடின் இவ்வாறுதான் உளற வேண்டியிருக்கும்.

கோபி றட்னம்
பிரித்தானியா

Blogger இயக்குவது.