இறால் பண்ணையால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!!
யாழ்.அராலித்துறையில் 3 இறால் பண்ணைகளை அமைப்பதற்கு பெரும் செல்வந்தா்களுக்கு காணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அப்பகுதி மீனவா்கள் பெரும் பாதிப்பை எதிா்கொள்ளும் ஆபத்துள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா்.
யாழ்.வேலணை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இப் பிரதேசத்தில் மூன்று நிறுவனங்க ளிற்கு தலா 50 ஏக்கர் விகிதம் மொத்தம் 150 ஏக்கர் நிலம் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு மூன்று நிறுவனங்களிற்கும் வழங்கப்படும் இடங்களிற்கான அனுமதியினை பிரதேச சபை, நீரியல்வளத்துறைத் திணைக்களம், நெக்டா, மீபா, கரையோரப் பாதுகாப்பு அதிகார சபை ஆகியன அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்காக குறித்த திணைக்களங்கள் மற்றும் சபைகளின் தலைவர்கள் ஆகியோர் குறித்த இடத்தினை நேரில் பார்வையிட்டே அனுமதி வழங்கியுள்ளனர். இதில் பிரதேசசபையின் தவிசாளரும் நேரில் சென்று அனுமதித்தபோதும் அது தொடர்பில் சபையில் பிரஸ்தாபிக்கப்பட வில்லை.
தீவுப் பகுதியில் ஏற்கனவே 8 பண்ணைகள் உள்ள நிலையில்
தற்போது அரச நிலத்தில் பண்ணைகள் அமைப்பதற்காக வழங்கப்படும் இந்த நிலங்கள் 35 ஆண்டுகளாக குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் நிலையில் இவர்களிற்கான வாடகைப் பணத்தை விலை மதிப்பீட்டுத் திணைக்களமே தீர்மானிக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு சகல அனுமதிகள் உரிய இடங்களினால் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடற்றொழில் அமைச்சின் ஒப்புதலுடன் இத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமையால் எமது உள்ளூர் வளங்களும் மீன்பிடியில் பாதிப்பும் ஏற்படுமோ என்ற அச்சமும் உள்ளதாக உள்ளூர் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo