டயகம தோட்டத்தில் தீப்பரவல்!!

டயகம தோட்டத்தில் இன்று ஏற்பட்ட பாரி தீ பரவலில் 6 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியதுடன் லயன் தொகுதியில் மேலும் 6 வீடுகள் பாதிக்கப்பட்டன.


வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் தீயை அணைக்க முற்பட்டபோதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டது.

அதன்பின்னர் பெரும் சிரமத்துக்கு சுமார் 2 மணித்தியாலயத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் சில வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.

இந்தத் தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 6 வீடுகள் சேதமடைந்ததுடன் 37 பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் தோட்ட நிர்வாகம், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு, அக்கரப்பத்தனை பிரதேச சபை என்பனவற்றின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் டயகம பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப் பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளை அமைப்பதற்கு சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.பீ.சக்திவேல் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.