இந்தியன் 2 படப்பிடிப்பில் என்ன நடந்தது!!

`இந்தியன் 2' திரைப்படத்தை, பெரும் பொருள்செலவில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிக்காக நாசரேத் பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வந்தன.


நேற்று (பிப்ரவரி 19) இரவு படப்பிடிப்பின்போது ஒரு காட்சிக்காக லைட்டிங் செட் செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டிருந்தது. அப்போது கிரேன் அறுந்து விழுந்து சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகியுள்ளனர்.
படப்பிடிப்பில் நடந்த இந்தக் கோர சம்பவத்தை நேரில் பார்த்த தொழில்நுட்ப கலைஞர் ஒருவர் கண்ணீருடன் அங்கு நடந்ததை விவரித்தார்.
``பொதுவா இரவு ஷூட்டிங் நடக்கும்போது 9.30 மணிக்கு பிரேக் விடுவாங்க. அந்தச் சமயத்தில் அடுத்த காட்சிக்கான ஏற்பாடுகள் நடக்கும். நேத்தும் அப்படி பிரேக்விட்ட சமயத்தில் படக்குழுவினர் லைட்டிங் செட் பண்ணிட்டு இருந்தாங்க. அப்போதுதான் அந்த இடத்திலிருந்து ஷங்கர் சார், கமல் சார், காஜல் எல்லாரும் போனாங்க. ரொம்ப நேரமா கிரேனில் இருந்து சத்தம் கேட்டுட்டே இருந்துச்சு.

நாங்க எல்லாரும் லைட்டிங் செட் பண்றதால இந்தச் சத்தம் வருதுன்னு பேசிக்கிட்டோம். திடீர்ன்னு பார்த்தா பெரும் சத்தத்தோட கிரேன் கீழ விழுந்துருச்சு. எனக்கு என்ன நடக்குதுன்னே புரியல. தூரத்தில் இருந்து ஷங்கர் சார் தலையில அடிச்சிட்டு கதறி அழுதுட்டே ஓடி வந்தார். கிரேனுக்குக் கீழ நின்னுட்டு இருந்தவங்களோட உடலில் இருந்து ரத்தம் வெளியேறுவதை என் கண்ணால பார்த்தேன். அங்கிருந்து எல்லாரையும் மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போனாங்க. ஆனா மூணு பேரையும் காப்பாத்த முடியலை. கிரேன் பாரம் தாங்க முடியாம அறுந்து விழுந்ததா எல்லாரும் பேசிக்குறாங்க.

ரொம்ப நேரமா கிரேனில் இருந்து சத்தம் கேட்டுட்டே இருந்துச்சு. நாங்க எல்லாரும் லைட்டிங் செட் பண்றதால இந்தச் சத்தம் வருதுன்னு பேசிக்கிட்டோம். திடீர்ன்னு பார்த்தா பெரும் சத்தத்தோட கிரேன் கீழ விழுந்துருச்சு.

இன்னும் சிலர் அந்த கிரேன் ஓனர் மேலதான் தப்புன்னு சொல்றாங்க. ஏன்னா அது ஷூட்டிங்குக்குப் பயன்படுத்துற கிரேன் இல்லையாம். அதிகக் கனம் தாங்காதுன்னு தெரிஞ்சும் அதை எடுத்துட்டு வந்திருக்காங்க. மேலும், ஈவிபி-யில் எப்போதுமே காத்து வீசிட்டே இருக்கும். சம்பவம் நடந்தப்பவும் காத்தடிச்சிட்டே இருந்துச்சு. ரொம்ப அலைமோதிட்டே இருந்துச்சு. அதனாலகூட அப்படி நடந்திருக்கலாம்னு எனக்குத் தோணுது.

சம்பவ இடத்தில் இறந்துபோன கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா, ஷங்கர் சார்கிட்ட 15 நாளைக்கு முன்னாடிதான் வேலைக்குச் சேர்ந்தார்னு சொல்றாங்க. இதற்கு முன்னாடி அவர், அகமது சார்கிட்ட வேலை பார்த்துட்டு இருந்தார். இன்னொருத்தர் புரொடக்‌ஷன் உதவியாளர். இன்னொருத்தர் டெக்னிஷியன். இன்னும் சிலர் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்காங்க. இது பிரேக் சமயத்துல நடந்ததால 3 பேரோட போச்சு. ஷூட்டிங் அப்போ நடந்திருந்தா நான்கூட செத்துப் போயிருப்பேன்’’ என்றார் நடுக்கம் குறையாமல்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.