மகா சிவராத்திரி பலன்கள்!!
இராத்திரி என்பது இரவு வேளை. அதாவது, இருள் காலம் எனப் பொருள்படும். உண்மையான இருள் காலம் என்பது இறைவன் உலகம் முழுவதையும் ஒடுக்கி இருக்கும் காலமாகும். இதனைச் சர்வ சங்கார காலம் அல்லது பிரளய காலம் எனவும் ஊழிக்காலம் எனவும் பலவாகக் கூறுவர். இரவில் ஒளியின்றி உயிர்களின் நடமாட்டம் இல்லாது, அமைதி நிலவுவது போல, பஞ்ச பூதங்களும், தனு, கரண, புவண போகங்களும் ஒன்றுமே இல்லாது உயிர்கள் செயலற்றுக் கிடப்பதனால் அமைதி நிலவும்.
அந்த பேரிருளில் தனித்து நிற்பவரே சிவபெருமான் ஆவார். இதனாலேயே அது ‘சிவராத்திரி’ எனக் சொல்லப்படுகிறது. உலக ஒடுக்க நிலையாகிய இரவு சிவனுக்கே உரியதாகும். இதனால் அந்த இரவை சிவராத்திரி என்பர். மேலும் ராத்திரி என்பதற்குப் ‘பூசித்தல்’ எனும் பொருளும் உண்டு. இதன்படி “சிவனைப் பூசிக்க அல்லது வழிபடத் தகுந்த இரவே “சிவராத்திரி” எனலாம். பொருள்படும்.
மகா சிவராத்திரி
சிவராத்திரி என்பது மாதந்தோறும் அமாவாசைக்கு முதல் நாள் வரக்கூடியது மாத சிவராத்திரி எனப்படும். மாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முதல் நாள் மகா சிவராத்திரி என்று என்று சொல்லப்படுகிறது.
தொடக்கக் காலத்தில் ஒரு நாள் பார்வதி தேவி, இறைவன் சிவபெருமான் கண்களை விளையாட்டாக மூட, அனைத்து உலகங்களும் இருளில் மூழ்கிப் போனது. தேவர்கள் பயத்துடன் இறைவனை வேண்ட, மீண்டும் ஒளி வந்தது என்றும், அந்நாளே சிவராத்திரி என்று சொல்வர்.
தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற திருப்பாற் கடலைக் கடைந்த போது மகா பிரளயத்தின் பின் படைக்கப்பட்ட உயிர்கள் மோட்சகதி அடைய வேண்டி பார்வதி சிவனை வழிபட்ட நாளே சிவராத்திரி என்றும் சொல்வதுண்டு.
மார்க்கண்டேயன் உயிரைக் காக்க சிவபெருமான் எமனைக் காலால் எட்டி உதைத்தார். அதன் பின்பு, தேவர்கள் அனைவரும் எமனை உயிர்ப்பித்துத் தர வேண்டினர் என்றும், அந்நாளையேச் சிவராத்திரி என்பவர்களும் உண்டு.
ஒரு முறை பார்வதிதேவி சிவபெருமானிடம், “இறைவா, தங்களை வழிபாடு செய்வதற்கு மிகவும் சரியான நாள் எது?” என்று கேட்க, அதற்குச் சிவபெருமான் அவளிடம், “மாசி மாதத் தேய்பிறை 14ம் நாளான அமாவாசை நாளே என்னை வழிபட மிகவும் சரியான நாளாகும். அன்று விரதம் இருந்து என்னை வழிபடுபவர்கள் என் அருளை முழுமையாகப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்” என்று சொன்னார் என்றும், அப்போது அங்கிருந்த நந்திதேவர் இந்நாளின் சிறப்பை தேவர்களுக்கும், சூதபுராணிகருக்கும், முனிவர்களுக்கும் தெரிவித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.
கந்த புராண தக்ச காண்டத்தில் அடிமுடி தேடிய படலத்தில் மஹா சிவராத்திரி குறித்துச் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. படைப்புக் கடவுளான பிரமதேவனுக்கும் காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கும் இடையே யார் பெரியவர்? (நானே பிரமம்) எனும் வாதம் ஏற்பட்டது. அப்போது, அதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகச் சிவபெருமான் தானே பெரியவர் என்பதை ஆன்மாக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, மாசி மாதத்து கிருஷ்ண பட்ச சதுர்த்தசி திதியும் சோம வாரமும் திருவோண நட்ச்சத்திரமும் கூடிய புண்ணிய நாளில் இரவு பதின்நான்கு நாளிகை அளவில் ஒளி (சோதி) வடிவமாகத் தோன்றினார். அப்பொழுது அங்கே, உங்கள் வலிமையைக் காண இந்த ஒளியின் அடியையும் முடியையும் காணுங்கள் என்று ஒரு குரல் மட்டும் கேட்டது. பிரம்மா, விஷ்ணு இருவரும் அதனைக் கேட்டனர். பிரம்மா அன்னப்பட்சி வடிவமாக மாறி ஒளியின் முடியையும் விஷ்ணு பன்றியாக மாறி ஒளியின் அடியையும் காணச் சென்றனர் . நீண்டகாலம் சென்றது, அவர்களால் எதையும் காண முடியவில்லை. உடலும் உள்ளமும் களைப்படைந்து சோர்ந்து மீண்டனர். அந்த வேளையில், சிவபெருமான் அந்த சோதியின் நடுவே சிவலிங்க வடிவமாக தோன்றி, பின்னர் அந்த இலிங்கத்தில் இருந்து நீலகண்டமும் முக்கண்ணும், மான், மழு, அபயம், வரதம் பொருந்திய கரங்களும் கொண்டு வெளிப்பட்டுக் காட்சி தந்தருளினார். அந்த இலிங்கத்தின் இடப்பக்கத்தில் விஷ்ணுவும், வலப்பக்கத்தில் பிரம்மனும் நின்று சிவபெருமானை வழிபட்டனர். பிற தேவர்களும் இறைவனின் ஒளி வடிவிலான அந்த வடிவத்தைக் கண்டு வணங்கினர். ஒளியின் நடுவில் லிங்கோற்பவராக இறைவன் சிவபெருமான் தோன்றிய இரவு வேளையே சிவராத்திரி எனப் பெயர் பெற்றது என்று சொல்கிறது. திருமுறைப்பாடல்களும் கந்தபுராணம் கூறும் செய்தியையேத் தருகின்றன.
சிவபெருமானுக்குரிய விரத நாட்களில் முதன்மையானது மகா சிவராத்திரி என்கின்றனர். சிவராத்திரியின் சிறப்புகள் பற்றி, கருட புராணம், கந்தபுராணம், பத்மபுராணம், அக்னி புராணம் என்று சில நூல்களில் பல்வேறு குறிப்புகள் தரப்பட்டிருக்கின்றன. இதே போன்று சிவராத்திரியைப் பற்றி சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பல்வேறு புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவராத்திரி விரதங்கள்
சிவராத்திரியானது, நித்ய சிவராத்திரி, பட்ச சிவாராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து வகைப்படும்.
1. பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் (வருடத்தில் 24 தடவை) அனைத்தும் நித்ய சிவராத்திரி என்ப்படும்.
2. தை மாதத்தில் கிருஷ்ண பட்ச தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்களுக்குத் தொடர்ந்து விரதம் அனுட்டானங்களுடன் சிவபூஜை செய்வது பட்ச சிவராத்திரி எனப்படும்,
3. மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசி, பங்குனி மாதம் முதல் திருதியை, சித்திரை மாத முதல் அஷ்டகம், வைகாசி முதல் அட்டமி, ஆனி சுக்கில அட்டமி, புரட்டாதி முதல் திரயோதசி, ஐப்பசி சுக்கில துவாதசி, கார்த்திகை முதல் சப்தமி, மார்கழி இரு பட்ச சதுர்த்தசி, தை சுக்கில திருதியை ஆகிய 12 மாதங்களும் கொண்டாடும் விரதங்கள் மாத சிவராத்திரி நாட்கள் எனப்படுகின்றன.
4. திங்கட்கிழமை (சோம வாரம்) அமாவாசை அறுபது நாழிகை இருக்கும் நாள் யோக சிவராத்திரி.
5. மாசி மாத கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தசி தினமன்று வரும் ராத்திரியே மகாசிவராத்திரியாகும். இந்நாளை ஆண்டு சிவராத்திரி என்றும் சொல்வதுண்டு.
சிவராத்திரி வழிபாடு
சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டுச் சூரிய உதயத்தின் போது, காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து, நண்பகலில் குளித்து, மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து, வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தல் சிறப்பு. வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் சிறப்பு.
மகா சிவ ராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டு பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும்.
மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து, நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும். கோயில்களிலும் சிவபூஜை செய்யலாம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.
சிலர் சிவராத்திரியன்று இரவு வேளையில் விழித்திருந்தாலே போதுமென்று நினைத்துத் தொலைக்காட்சி பார்த்தல், திரைப்படம் பார்த்தல், ஏதாவதொரு விளையாட்டை விளையாடிப் பொழுதைக் கழித்தல் போன்ற தவறான வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். இப்படிச் செய்வதால், அவர்களுக்குச் சிவராத்திரி பலன்கள் எதுவும் கிடைக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வழிபாட்டுப் பலன்கள்
மகா சிவராத்திரி நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று இறைவன் சிவபெருமானை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் உண்டாகும். முறைப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவபலன் அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூன்றேழு தலைமுறைகளும் நற்பலன் அடைந்து முக்தியை அடைவர் என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன. கௌதமர், வசிட்டர், அகஸ்தியர் போன்ற சப்தரிஷிகளும், சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், மன்மதன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரும் சிவராத்திரி விரதம் இருந்து பயன் பெற்றதாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo