பெல் 212 உலங்கு வானூர்தி சீதுவ தீயணைக்கும் பணியில்!!

சீதுவ பகுதியில் பரவியுள்ள தீயை அணைக்கும் பணியில் பெல் 212 உலங்கு வானூர்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சீதுவ – கெலாபத பகுதியில் இன்று (வியாழக்கிழமை) பரவிய தீ காரணமாக கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஜா – எல முதல் கட்டுநாயக்க வரையான பகுதி மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டது.

இதன் பிரகாரம் கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் வாகனங்கள், ஜா-எல நுழைவாயிலூடாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டது.

கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ஜா-எல நுழைவாயிலூடாக பிரவேசித்து கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.