17 வயது மியா-ரோஸ் கிரேக்கிற்கு கௌரவ கலாநிதிப் பட்டம்!!

பதினேழு வயதுப் பெண்ணான சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்படவுள்ளது.


இந்தப் பட்டதைப் பெறவுள்ள “பேர்ட்கேள்” (Birdgirl) என்றழைக்கப்படும் மியா-ரோஸ் கிரேக் (Mya-Rose Craig) 17 வயதில் இத்தகைய அங்கீகாரத்தைப் பெறுவது சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளார்.

கௌரவ கலாநிதிப் பட்டம் பெறும் இளைய பிரித்தானியர் என்ற பெருமையை அவர் பெறுவார் என்று பிரிஸ்ரல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் வாழும் பங்களாதேஷைப் பூர்வீகமாகக் கொண்ட மியா-ரோஸ் கிரேக், சிறுபான்மை கருப்பின பின்னணியில் உள்ள குழந்தைகளை பாதுகாப்பதற்காக பிளாக் 2 நேச்சர் (Black2Nature) முகாம் ஒன்றைஅமைத்தார்.

பேராசிரியர் ரிச் பான்கோஸ்ற் (Rich Pancost) கூறுகையில்; உலகில் ஒரு உண்மையான மாற்றத்தை மியா-ரோஸ் கிரேக் ஏற்படுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டார்.

14 வயதில் தொடங்கிய மியா-ரோஸின் பணியானது, சிறுபான்மை கருப்பின சமூகங்களைச் சேர்ந்த இளையவர்களின் பாதுகாப்பைப் பற்றி அறிய உதவும் வகையில் அடிமட்டத் திட்டங்களை வடிவமைப்பதை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.