யாழ் ஸ்ரான்லி வீதியில் வாகன நெரிசல்!!
யாழ் மாநகர ஸ்ரான்லி வீதிப் பகுதியில் போக்குவரத்து நெரிசல்களை குறைக்கும் முகமாக யாழ் பிரதேச செயலர், மாநகர சபை ஆணையாளருடன் களத்திற்கு நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்துள்ளார்.
ஸ்ரான்லி வீதியில் கடும் வாகன நெரிசல்கள் காணப்படுவதனால் பொதுமக்கள் போக்குவரத்தின் போது இடையூறுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு போக்குவரத்து நெரிசல்களை குறைப்பது தொடர்பில் யாழ் மாநகர ஆணையாளர் இ. ஜெயசீலனுடன் களத்திற்கு சென்று பிரதேச செயலர் ச. சுதர்சன் நிலமைகளை ஆராய்ந்துள்ளார். இதன்போது அவர்களுடன் யாழ்ப்பாண வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரியும் வருகை தந்திருந்தார்.
ஸ்ரான்லி வீதியில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் தமது விற்பனை பொருள்களை வீதியோரங்களில் காட்சிப்படுத்தி வைப்பதனால் , வாகனத்தை நிறுத்த இடமில்லாததனால் சாரதிகள் வாகனத்தை வீதிகளில் நிறுத்துகின்ற நிலையில் பெரும் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் வீதியோரங்களில் பொருள்களை காட்சிப்படுத்தும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அது தொடர்பில் யாழ் மாநகர வருமான பரிசோதகரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் , இனி வரும் காலங்களில் வீதியோரங்களில் பொருள்களை காட்சி ப்படுத்தினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வீதியில் குறியீடுகள் மற்றும் வீதியோரங்களில் வெள்ளை கோடுகள் வரைவது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டதுடன் வீதி ஒழுங்களையும் வாகன தரிப்பிட ஒழுங்குகளையும் போக்குவரத்து பொலிஸார் கண்காணிக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இதேவேளை, மின்சார நிலைய வீதியிலும் வெள்ளைக்கோடு வரையப்பட்டு பேருந்துகளை அதற்குள் நிறுத்த நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு பரிந்துரைகள் வழங்கப்படும் என யாழ்பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo