யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு!!
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மலையக மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. அத்துடன், வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் தொண்டமானுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் யாழ். விஜயத்தின்போது பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர், தற்போது வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.
அமைச்சரின் விஜயத்தில் அமைச்சின் அதிகாரிகள், அவரது கட்சியின் இளைஞரணிச் செயலாளரும் புதல்வருமான ஜீவன் தொண்டமான் உட்பட யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்ஜன் இராமநாதன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுகிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் மீளக் குடியமர்ந்த மக்களுக்கான வீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சர் இன்று காலையில் அடிக்கல் நாட்டியமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)