உணவு ஒறுப்புப் போராட்டத்தில் மறவன்புலவு சச்சிதானந்தம்!

சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் யாழ்ப்பாணத்தில் அடையாள உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


வடக்கில் தலையெடுக்கும் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி அவர், யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள மாட்டின் குருமடத்தின் முன்றலில் இந்தப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் உள்பட வடக்கில் மத வன்முறைகள் அதிகரித்து வருகின்றதாகவும், இதனால் சைவத் தமிழ் மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையினால் தொடர்ந்தும் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

குறிப்பாக கிறிஸ்தவர்களால் மேறகொள்ளப்படுகின்ற சைவத் தமிழ் மரபுகளை மாற்றுகின்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதற்கு இங்குள்ள யாழ்ப்பாணம் ஆயர் இல்லம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சைவத் தமிழ் மரபு அழிக்கப்படுவதைக் கண்டித்தும் மத வன்முறைகள் தலைதூக்க இடமளிக்க கூடாது என்பதை வலியுறுத்தி இந்த ஒரு நாள் அடையாள உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.