மனசு!
கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகளின் மனசு
அள்ளி கொடுப்பதில் கர்ணனின் மனசு
உண்மையே பேசுவது அரிச்சந்திரனின் மனசு
தவறுகளை தட்டிக்கேட்க துடிக்கும் நக்கீரன் மனசு....
அமைதியான சூழலில் வாழும் சிறை கைதிகளின் மனசு
நல்லதை
செய்யவேண்டும் என்று நினைக்கும் சகாதேவன் மனசு
பிறருக்கு ஓடோடி உதவும் கலகம் செய்யும் நாரதர் மனசு....
பெற்றோர்கள் சொல்லுவது கேட்கும் பகத்சிங் மனசு
குழந்தைகளுக்கு நல்லதை சொல்லிக் கொடுக்கும் சீதாவின் மனசு
இலவசம் வேண்டாம் சொல்லும் மனசு
அறம் செய்ய விரும்பும் நகைச்சுவை நடிகர் கலைவாணர் மனசு....
மனதில் இருந்தே நஞ்சை நீக்கவேண்டும் சொல்லும் பிரகலாதன் மனசு
நாட்டை சுத்தம் செய்ய நூறு இளைஞர்கள் இருந்தால் போதும் சொல்லும் விவேகானந்தர் மனசு....
உள்ளூர் விவசாயம் நெசவு சிறு தொழில்களை அழித்துவிட்டு பன்னாட்டு கம்பெனிகளை விளைநிலங்களில் விட்ட அரசியல்வாதிகள் அதிகாரிகளின் மனசு
பள்ளிக்கூடம் ஒழுக்கமாக நடத்தாமல் மதுபான கடைகள் நடத்தும் தமிழக அரசின் மனசு....
கோ.ரா.ரவி.பட்டு நெசவாளர்.
காஞ்சிபுரம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo