சதோச புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி போராட்டம்
காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணிவரை நடைபெறும் குறித்த போராட்டமானது மன்னார் நகர மண்டபத்தின் முன் ஆரம்பமாகி மன்னார் சதோச மனித புதைகுழிக்கு அருகில் ஒன்று கூடலுடன் நிறைவு பெறும். சதோச புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும், நீதியான விசாரணை நடாத்தக் கோரியும், சர்வதேச தலையீட்டை வலியுறுத்தியும், அத்தோடு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை நேரடித் தலையீட்டையும்; வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இப்போராட்டத்திற்கு அனைத்து பொதுமக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும், பொது அமைப்புக்களும், வர்த்தக சங்கங்களும் ஒத்துழைப்பு தரும்படி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் ஆகிய நாம் அன்பாக கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.